பக்கம்:ஆப்பிள் பசி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆஸ்பத்திரியிலிருந்து மாலையில் சுபத்ராவை விடுதலை செய்தார்கள். பளபளக்கும் ரோல்ஸ் ராய்ஸில் ஏறப் போனவளை நிறுத்தி, ப்ளாஷ் பல்புகள் பளிச்சிடப் பத்திரிகைக் காரர்கள் சுபத்ராவைப் படம் எடுத்துக் கொண்டார்கள்.

சுபத்ராவின் கார் அவளது வீட்டு வாசலில் போய் நின்ற போது அங்கேயும் நிருபர்கள் கூட்டம் அவளைச் சூழ்ந்து கொண்டது. புகைப்படக்காரர்கள் அவளைப் பல கோணங் களில் படமெடுத்ததும், 'ஸார், நீங்களும் சேர்ந்து நில்லுங்க" என்று சாமண்ணுவை அழைத்து அவள் பக்கத்தில் நிறுத்திப் போட்டோ எடுத்தார்கள்.

"சமீபத்தில் தங்களுக்கு நேர்ந்த விபத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்று சுபத்ராவிடம் கேட்டனர்.

'ஓ! அது என் வாழ்க்கையிலேயே பெரிய அனுபவம்! சாமண்ணுவின் நடிப்பு என்னை அந்த அளவுக்கு உணர்ச்சி வசப்படுத்திவிட்டது. அதென்னவோ, அந்த நடிப்பு அவரை நிஜ துஷ்யந்தனகவே ஆக்கிவிட்டது. நான் அவரை நிஜ துஷ்யந்தன் என்றே நம்பிவிட்டேன்' இதைச் சொல்லிவிட்டு அவள் சாமண்ணுவைப் புன்ன கையோடு பார்த்தாள் ! எதையோ, எண்ணியவளாய்க் கலகலவென்று சிரித்தாள்.

'மன்னிக்கனும் மேடம்! நீங்களும்கூட நிஜ சகுந்தலையாவே ஆயிட்டீங்களே!' -

"ஆமாம்.' 'இனிமே நீங்க சாமண்ணு கூடத்தானே ஜோடியா நடிப் பீங்க ?’’

"ஆமாம்! எப்பவுமே இனி சேர்ந்தேதான் எல்லாமே...' என்று அந்த வார்த்தையை அவள் முடிக்குமுன்பே பலத்த கரகோஷம்!

போர்ட்டிகோவிலிருந்து எல்லோரும் உள்ள்ே போளுர் கள். மேற்கத்தி முறையில் மது வழங்கப்பட்டது. கிராமபோன் இந்திப் பாடல்களைப் பாடியது. இரண்டு பெரிய பங்காக்கள் ஹாலில் ஆடின. சுபத்ரா விருந்தாளிகளிடையே அங்கங்கே நின்று உரையாடினுள். அவ்வப்போது சாமண்ணுவின் கை களைப் பிடித்துத் தன் இடுப்போடு அணைத்துக் கொண்டாள்.

சாமண்ணு அந்த ஸ்பரிசத்தில் காந்தர்வ பரவசமாகிக் காற்றில் மிதப்பதுபோல் உணர்ந்தான். தன் பழைய நிலை யைச் சற்றே எண்ணிப் பார்த்தான்.

அவனது கிராமம். அவனது குடும்பம். அவனது தாயார். அந்த வறுமை.... יa

சாமண்ணு! எப்படி ஆயிட்டேடா நீ! நான் பார்க்கக் கொடுத்து வைக்கலியேடா!'

விருந்து வைபவங்கள் எல்லாம் முடிந்து ஒவ்வொருவராக விடைபெறும்போது ராமமூர்த்தியும் சகுந்தலாவும் அவன் நினைவில் குறுகுறுத்தார்கள். அதான் காரை அனுப்பியாச்சே!

177

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/170&oldid=1028152" இலிருந்து மீள்விக்கப்பட்டது