பக்கம்:ஆப்பிள் பசி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊரெல்லாம் சுற்றிக் காட்டச் சொல்லியாச்சே! இதுக்கு மேலே என்ன செய்துட முடியும்?' என்று ஆத்திரத்தோடு மனச்சாடசிக்குப் பதில் கூறிக் கொண்டான்.

ஊருக்குத் திரும்பிய சகுந்தலா, சில நாட்கள் காய்ச்ச லோடு இருந்தாள். சாதாரண ஜூரம்தான்.

நாலு நாட்கள் படுக்கையிலேயே இருந்தபின் ஐந்தாவது நாள் மெல்ல எழுந்து தோட்டத்தில் உலாவத் தொடங்கிள்ை. 'சகுநதலா! உனக்கு என்னம்மா என்னம்மா?' ராம மூர்த்தி இதற்குள நூறு தடவை கேட்டுவிட்டார்.

'ஒன்றுமில்லை' என்ற சாரமற்ற சொல்தான் அவளிட மிருந்து வந்த பதில்.

பின்னொரு நாள் மால்ை சகுந்தலா காரை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பியதும், சகுந்தலா பழைய நிலைக்கு வரு கிருள்' என்று எண்ணி மகிழ்ந்தார். - -

முதலில் பிரதான சால்ைக்குள் காரை ஒட்டிச் சென்ற சகுந்தலா அங்கிருந்து ஊரைவிட்டுச் சற்றே விலகினள்.

ஓரிடத்தில் காரை நிறுத்திப் புதுக்காற்றை சுவாசித்தாள். வெளி இயற்கையின் மெலிதான மணம் அதில் பரவியிருந் தது. உள்ளே இருதயமெல்லாம் புகுந்து குளிர்ச்சி தருவதுபோல் இருந்தது. பிற்கு திரும்பவும் கார் ஏறி மேலும் சற்று. தூரம் சென்று அந்தக் கிளைப்பாதை ஒரம் நிறுத்தினள், கீழே இறங்கி யதும் கால் நடுங்கிற்று. அடிகளை மெதுவாக முன்னே வைத்து நடக்க ஆரம்பித்தாள். v -

சாலை ஒரு அவிழ்ந்த நாடா போலக் கிடந்தது. மாலை மயக்கத்தில் இடதுபுறம் வயலும், பாறைகளும் நிழல் சித்திரங் களாய் மாறிக் கொண்டிருந்தன. -

வலதுபுறம் மல்லிகைப் புதர்களிலிருந்து வந்த மணத்தில் சாமண்ணுவை நுகர்ந்தாள். -

ஏன் இந்த ஒடையில் துக்கம் நிரம்பியிருக்கிற்து? இதைப் பார்த்ததும் என் மனத்தில் ஏன் சுமை ஏறுகிறது? இயற்கையே அங்கங்கு சோகங்களை ஒளித்து வைத்திருக்குமோ?

அந்த சகுந்தலைக் காட்சி பனியிலிருந்து விலகியது போல் பிரத்யட்சமாயிற்று.

...காலில் முள் குத்துகிறது. பாறையைப் பிடித்துக் கொண்டு நிற்கிருள் 'சாமு குனிந்து அந்த முள்ளை எடுக்கிருன்...

மேலே நடந்தாள். அந்தப் பிரதேசமே துக்கத்தை இறுக்கமாக வைததிருப்பது போல் தோன்றியது. * -

"சாமூ!' என்று முனகலாய் அழைத்தாள். பழைய மாலைப் பொழுதில் இங்கே j?' ே உலாவிய காட்சிகள் அவள் கண்ணிரில் கரைந்தன - 178

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/171&oldid=1028154" இலிருந்து மீள்விக்கப்பட்டது