பக்கம்:ஆப்பிள் பசி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

அடிக்கடி பெருமூச்சு விட்டுக் கொண்டு நடந்தாள் சகுந் தலா. உலகத்து ஆனந்தத்தை, உல்லாசத்தை, இன்பத்தை யாரோ அப்படியே ஒரு போர்வை போல் உருவி எடுத்து விட்ட மாதிரி இருந்தது அவளுக்கு. இந்த மல்லிகை ஒடையில் முன்பெல்லாம் இருந்த ஒரு குதூகலமான உயிரோட்டம் இப்போது எங்கே? -

உணர்ச்சியின் முதல் திவலை கண் ஒரம் வந்தது. சகுந்தலா தேம்பினள். நெஞ்சு அடிக்கொரு முறை விம்மியது. அந்தத் தனிமையில், லேசாக இருள் சூழ்ந்து கொண்டிருந்த நிலையில் அவளால் மனம் விட்டு அழ முடிந்தது.

அவள் தனிமையில் நின்று அழுவதைச் சற்று தூரத்தில் ஒளிந்து கவனித்துக் கொண்டிருந்தது ஒர் உருவம். அதை சகுந்தலா கவனிக்கவில்லை. இருள் கணக்கவே, அதற்கு மேல் அந்த இடத்தில் இருப்பதற்கு அஞ்சியவளாய் காருக்குச் சென் ருள். உடனேயே அந்த உருவமும் லேசிாக ஒடி அங்கே மரத்தோடு ச்ாத்தி வைத்திருந்த சைக்கிளில் ஏறிக் காற்ருய்ப் பறந்தது.

அந்த உருவம் ராமமூர்த்திதான். தம் மகளுடைய போக்கில் ஏதோ துயரம் நேர்ந்திருப்பதை ஊகித்த அவர், அவள் தனிமை யில் எழுந்து ச்ென்றதுமே ரகசியமாகப் பின்தொடர்ந்து போய் மறைந்து நின்று கவனித்தார். இப்போது அவளுக்கு முன்னல் குறுக்கு வழியில் புகுந்து வேகமாய் வீடு போய்ச் சேர்ந்து விட்டார்.

179

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/172&oldid=1028156" இலிருந்து மீள்விக்கப்பட்டது