பக்கம்:ஆப்பிள் பசி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'என்ன சொல்ருங்க?' என்ருர், டைரக்டர். . - 'இப்பத்தான் வீட்டுக்கு வந்திருக்காங்களாம். ரொம்ப களைப்பாஇருக்கு.நான் இப்பவந்துஎன்னசெய்யப் போறேன்? நீங்க எல்லோரும் பார்த்துவிட்டு வாங்க. நான் அப்புறம் பார்த்துக்கறேன்' என்கிருங்க.'

அவர் மனக்குறிப்பை உணர்ந்து டைரக்டர், 'எல்லோரும் வாங்க போவோம்' என்ருர். .

எல்லோரும் ஒவ்வொருவராக வெளியே காத்திருந்த வேனே நோக்கிப் போனுர்கள்.

சிங்காரப் பொட்டும், சேட்டும்தான் மிச்சம். சிங்காரம் சிலை போல் நின்ருன். கண்கள் ஒன்றில்தான் மனம் தெரிந்தது.

'சிங்காரம்' என்ருர் சேட் கரகரத்த தொனியில். 'பணம் தெய்வமாகப் போச்சு!' என்ருர் பிழியும் குரலில். சிந்தனை தோய்ந்த அடியாக வைத்து அவர் வாசலுக்குப் போக, சிங்காரப் பொட்டு அவரைப் பின்பற்றினன்.

'வெள்ளைக்காரன் அரசாள வந்துட்டானில்லே! வியா பாரம் சிம்மாசனம் ஏறும். மனிதாபிமானம் இறங்கும்' என்று தாழ்ந்த குரலில் கூறிக் கொண்டே நடந்தார்.

எல்லோரும் வேனில் ஏறினர்கள்.

ஆஸ்பத்திரி நிறைய 'கார்பாலிக் நெடி மெலிதாக சியது.

உள்ளே வார்டுகள் வெளிச்சங்களாகத் தெரிந்தன. வரிசை யான கட்டில்கள் அனைத்தும் மெளனமாக இருந்தன.

நர்ஸ் யாராவது நடந்தால்தான் சலனம் மற்றபடி எல்லாமே அசைவற்றுத் தெரிந்தன: .

'ஏ' வார்டுக்குள் அவர்கள் நுழைந்தார்கள். ஒரு கர்ப்பக் கிருக அமைதி: மெல்லிய பாத உரசல்கள் மட்டும் கேட்டன.

அத்தனை பேர் பார்வைகளும் உறைந்து கிடக்க, சாமண்ணு கட்டிலில் வெள்ளைப் போர்வைக் குவியலாகக் கிடந்தான். கண்கள் பனிக்கப் பார்த்தான்.

சேட் அவன் அருகில் போய் முக்காலியில் அமர்ந்தார். 'சாமு!' என்றவர், இதயம்கரைந்ததுபோல்,"உங்களுக்குப் புகழ் வரணும்னு அழைச்சிட்டு வந்தேன்! இப்படிக் காலை இழந்துடுiங்கன்னு நினைக்கலை' என்று வெதும்பிச் சொன் ஞா.

அறை ஒருமுறை விம்மியது. சாமண்ணுவால் பேச முடியவில்லை. கண்கள் பொங்கிக் கொண்டு பார்த்தன. கூட்டத்தில் அத்தனை பேரும் மனித நன்றி'களாகத் தெரிந்தார்கள்.

அவனது மெளனம் எல்லோரையும் கலக்கிவிட்டது. சுற்றி

A 97

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/190&oldid=1028197" இலிருந்து மீள்விக்கப்பட்டது