பக்கம்:ஆப்பிள் பசி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனல் பார்வை மட்டும் வாசலையே நோக்கி இருந்தன. ஒரு சின்ன நிழல் பட்டாலும் உடம்பு சிலிர்த்தது. பிறகு அந்த நிழல் ஒரு நர்ஸ், அல்லது சிப்பந்தியாக மாறும்போது அவன் முகம் வாடியது.

இன்னும் அவன் கண்கள் சுபத்ராவைத் தேடி அலைவது சிங்காரத்துக்குத் தெரியும். அவள் இனி வரமாட்டாள் என்பது சிங்காரத்துக்குத் தெரியும். சாமண்ணு நம்பிக்கை யோடு அவள் வருவாள் என்று காத்திருப்பதும் தெரியும்.

ஒர் இரவு சிங்காரம் புறப்படும்போது சாமண்ணு அவனை அழைத்தான். பத்திரமாக ஒட்டியிருந்த ஒரு கவரை அவனிடம் கொடுத்தான்.

'பெட்டியிலே போட்டுடட்டுமா அண்ணே?’ என் கேட்டுக் கவரை இப்படியும் அப்படியும் திருப்பி விலாசம் இல்லை என்பதை உணர்ந்தான்.

சிங்காரம் தலைநிமிர, 'அவகிட்டே நேரிலேயே கொடு' என்ருன். வார்த்தை மெல்லிய குரலில் வந்தது.

"சுபத்ராவிடமா?’ என்ருன் சிங்காரம். "ஆமாம்!” என்று கூருமல் அந்த அர்த்தத்தில் தலையாட்டி

சிங்காரப்பொட்டு மறுநாளே அதை சேட் மூலம் சுபத்ரா வுக்குக் கொடுத்தனுப்பி விட்டான்.

அன்றிலிருந்து மாலை சிங்காரம் வரும் போதெல்லாம். சாமண்ணு ஆவலோடு எதிர்பார்த்தான். அவன் கண்களே அந்தக் கேள்வியைக் கேட்டன. "ஏதாவது பதில் உண்டா?” அதை எதிர்பார்த்து, சிங்காரமும் சொல்லிக் கொண்டிருந் தான். 'இல்லை, ஊரிலே இல்லை போல இருக்கு!”

சாமண்ண் ஆஸ்பத்திரியை விட்டுப் புறப்பட இரண்டு நாட்களே இருந்தன. சேட் அவனைப் பார்ப்பதற்கு வந்தார். அவன் கைகளைப் பற்றித் தழதழப்போடு. பேசினர்.

"சேட்ஜி, என்னை எல்லாரும் மறந்துட்டாங்க சேட்ஜி! நீங்கள்தான் எனக்கு ஆறுதலா வந்து போய்க்கிட்டிருக் காங்க' என்று கண்ணிர் பெருக்கினன். . . . . . . . சாமு! எல்லாரும்னு சொல்லாதீங்க! எல்லோரும் உங்களை நினைவு வச்சுக்கிட்டுத்தான் இருக்காங்க. எனக்கு வசதி இருக்கு, தவிர கடமை இருக்கு! நான் உங்களைப் பார்க்க ஒடி வந்துடறேன். அவங்களுக்கெல்லாம் என்ன வேலையோ?

"அப்படிச் சொல்லாதீங்க! வசதி இருக்கறவங்களுக்கு மனசு இல்லை. அவ்வளவுதான்' என்ருன் சாமண்ணு.

எனக்குத் தெரிஞ்ச ஒரே ஒரு நபர்தான் வசதி, நேரம், கடமை மூனும் இருந்தும் உங்கள்ைப் பார்க்க வரல்லை. அதை நான் யாருன்னே சொல்ல வேணும்!” என்ருர். .

சாமண்ணுவின் புருவம் உயர்ந்தது.

9ሰ ‰ 202

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/195&oldid=1028209" இலிருந்து மீள்விக்கப்பட்டது