பக்கம்:ஆப்பிள் பசி.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெரிய ஆரம்பித்தது.

என்ன அற்ப ஆசை தன்னைத் தானே பரிகசித்து, விழியின் அடிவாரத் திவலையை வழித்தான்.

அப்போதுதான் சிங்காரம் அவனது காலடிகளைப் பற்றி யிருந்தான். - -

"அண்ணே, உங்களை விடமாட்டேன். உங்களை விட மாட் டேன்' என்று டிராமாவில் வசனம் பேசுவது போல் பேசினன். தமது முயற்சி வீணுவதைக் கண்ட் சேட்ஜி சாமண்ணுவை நோக்கி, 'சாமு! இவருக்கு ஒரு உத்தரவு போடுங்க!' என்ருர். 'இந்தா சிங்காரம்! சொன்ன கேட்க மாட்டே நீ! எழுந் திருக்கப் போறயா, இல்லையா?' என்று சற்று அதட்டலாகக் கேட்டான் சாமண்ணு.

அவனது காலைப் பூப்போலப் பற்றியிருந்த சிங்காரம், மெள்ள எழுந்திருந்தான். அவுன் கண்கள் கலங்கி இருந்தன. "சிங்கார்ம்! இதென்ன? எனக்காக நீயும் வாழ்க்கையைப் பாழாக்கிக்கப் போறயா? ஒரு ஊனத்தின் மேலே jಿನ எல்லாரும் தங்களை ஊனமாக்கிக் கொள்ளக் கூடாது. இரக்கம் உண்ம்ையான இரக்கமாயிருந்தால் மற்றவர் ஊனத்தின் வேத னையைப் போக்குவதற்குப் பாடுபடனும். நீ சினிமாவிலே சேர்ந்து நல்லா சம்பாதி! நிறையப் பணம் சேர்த்து ஊனமுற் றவங்களுக்குப் பள்ளியோ, விடுதியோ நடத்து. என் ஒருத்தன் ஊனத்தை மட்டும் முக்கியமாக் கருதாதே. எனக்குக் காலில் தான் ஊனமே தவிர, மனசிலே இல்லை. அதஞலே நான் தைரியமா இருந்துப்பேன். மனசிலே தைரியம் இல்லாம இருப் பாங்க பாரு, அவங்களைக் காப்பாத்து...'

'நீங்க இப்படியெல்லாம் சொல்லாதீங்க. உங்களுக்காகத் தான் நான் வாழனும்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொன் ஞலும் சரி, உங்களை விடப் போவதில்லை' என்று ஆவேசத் துடன் கூறிஞன் சிங்காரம். ‘. . -

'சரி! நீ என்னைக் காப்பாத்தணும்னு அதுக்குப் பணம் வேணுமா? வெறும் கை முழம் போடுமா? நீ சம்பாதிச்சாத் தானே என்னைக் காப்பாத்த முடியும்! வீண் ஆவேசம் சோறு போடாது. முதல்லே சொல்றதைக் கேளு. அப்புறம் என்னைக் கவனிக்கலாம். சேட்டுக்குத் தொந்திரவு கொடுக் காதே!'

சிங்காரத்திற்கு சாமண்ணுவின் வார்த்தைகள் சரியாகப் LJL–l–68T. .

"அண்ணே! நீங்க சொல்றதை ஏத்துக்கிடறேன். ஆன ஒரே ஒரு வருஷம்தான் இந்தக் கல்கத்தாவில் இருப்பேன். அப்புறம் ஊரோட வந்துருவேன். அதுக்கப்புறம் ஆயுசு முழு தும் உங்க கூடத்தான். இது சத்தியம்!” என்ருன்.

"அப்படிச் சொல்லுங்க சிங்காரம்! இப்பத்தான் சரியாப் பேசlங்க!' என்று சேட்ஜி சந்தோஷப்பட்டார்.

207 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/200&oldid=1028219" இலிருந்து மீள்விக்கப்பட்டது