பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு 83

குரைத்தலிலும் பல வகையான மாற்ற ஒலிகளால் தனது பல வகை உணர்வுகளை அது வெளிப்படுத்துகின்றது. மொணங்கிக் குரைத்தால் காதல் உணர்வு. உரக்கக் குரைத்தால் பகை உணர்வு. உறுமிக் குரைத்தால் சின உணர்வு. கனைத்துக் குரைத்தால் விட்டுக்கொடுக்கும் உணர்வு, மேலும், நாம் அறிய இயலாமல் ஒன்றற்கொன்று தன் தன் உணர்வுகளைக் காட்டிக் கொள்ளக் குரைக்கும் ஒலிகள் பல. : .

நாயைப் போன்றே உயிரினங்கள் பலவும் தத்தம் உணர்வு களை வெளிப்படுத்த வாயால் ஒலிக்கின்றன. ஆனாலும், அவை கள் யாவும் வாயில்லா உரியினங்களாகவே குறிக்கப்படுகின்றன. வாயிருந்தும், வாயால் ஒலித்தும் அவை இப்பெயர் பெற என்ன திவினை செய்தன: தீவினை ஒன்றும் செய்யவில்லை. ஆனால், நல்வினை ஒன்றைச் செய்வதில்லை.

அவைதாம் தம் உணர்வை ஒலித்துக் காட்டுகின்றனவே என்றால், அவை ஒலிக்கு வாயை நிறைவாகத் தொழிற்படுத்து வதில்லை. அவை வெளியிடும் ஒலிகளுக்குத் தொண்டைதான் செயற்படுகின்றது. வாய் உதவுகின்றது. வாய் முயன்று தொழிற் படுவதில்லை. தொண்டையிலிருந்து எழும் ஒலியை வெளியே விட வாய் ஒரு வாயில் ஆகின்றது. தொண்டையிலிருந்து ೭೯ಕT டாகும் ஒலியை வாயில் உள்ள நா. பற்கள், உதடுகள் மேல் வாய் ஆகிய உறுப்புகள் முயன்று தொழிற்பட்டு வெளியிட்டால் அவ்வொலி வெவ்வேறு எழுத்து ஒலிகளாய் வெளிவரும். அந்த எழுத்துக் கூட்டல்களே சொல் - மொழி - பேச்சு எனப்படும்.

இதனைப் பிற உயிரினங்களின் வாய்கள் செய்வதில்லை. அஃதாவது வாய் ஒலியை எழுத்தாகப் பலுக்குகின்ற (உச்சரிக் கின்ற) செயலினைச் செய்வதில்லை, சொல்லாக, - மொழி

யாகப் பேசுவதில்லை.

வாய் செய்ய வேண்டிய இரண்டு செயல்களில் உணவு கொள்ளும் ஒன்றைச் செம்மையாகச் செய்து மற்றொன்றுக்கு வாயைப் பயன்படுத்த அறியாமல் தொண்டையைப் பயன் படுத்தி வருவதால் அவை வாயில்லா உயிரினம் ஆயின.