பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாயும் சொல்லும்

வாயில்லா உயிரினம்

வாய் என்ற உறுப்பு இல்லாத உயிரினம் இல்லை உடலுக்கு அமைந்த வாய் என்ற அளவில் நோக்கினால் மாந்தன் வாயை விட விலங்கு, பறவை. முதலிய மற்றைய உயிரினங்கள் பெரிய, வாய்களையே பெற்றுள்ளன எனலாம். அவ்வாறு பெற்றிருந்தும் அவற்றை 'வாயில்லா உயிரினம்' (வாயில்லாப் பிராணி) என் கின்றோம். ஏன் அவ்வாறு கூறுகின்றோம்? அவை வாயால் பேசு வதில்லை; நாம் பேசுகின்றோம். பேசத் தெரிந்ததால் பேசத் தெரியா அவற்றை இவ்வாறு கூறுவதா? இது முறையா? இவ் வாறெல்லாம் வினவத் தோன்றும் கூறலாம்; முறைதான்’ என் பதற்குத் தக்க அமைப்பான கரணியங்கள் உள.

வாய் செய்யும் செயல்கள் இரண்டு. ஒன்று உள்ளே வாங் கும் செயல். அஃது உணவைக் கொள்ளல். மற்றொன்று வெளியே விடுதல். அஃது ஒலித்தல்.

உணவு கொள்ளுதலின் நோக்கம் உடலைப் பேணல். ஒலித்த லின் நோக்கம் உள்ளத்து உணர்வை வெளிப்படுத்தல். இவ் விரண்டையும் பிற உயிரினங்களும் செய்கின்றன. செய்தும் வாயில்லா உயிரினம் என்னும் பட்டத்தைத்தான் அவை பெற் றுள்ளன.

உணவு கொள்ளும் வாயின் செயல் மாந்தர் முதலிய உயி ரினங்கள் யாவற்றிற்கும் பொது. உள்ளத்து உணர்வை வெளிப்

படுத்துவதிலும் பிற உயிரினங்கள் பலவகை உணர்வுகளைக் காட்டி ஒலிக்கின்றன.

நாய் வாயால் ஒலித்தலைக் குரைத்தல் என்கிறோம். அக்