துண்டு 9 9
நிறைந்தது அன்றோ எம் நாக நாடு. புகார் நகரத்தின் சிறப் பைக் கூறப் புகுந்த உங்கள் இளங்கோவடிகளார் எங்கள் நாட்டைச் சுட்டியன்றோ பேசினர்ர் மேலும் கேள்:
எங்களது நாட்டு மன்னர்பெருமான் பெயர் வளைவணன் என்பது. எங்களது மன்னர் பெருமானது பெயரின் முற்பகுதியில் எங்கள் பெயராம் வளை (சங்கு) அமைந்திருப்பதைப் பார். மன்னர் பெருமானது பட்டத்தரசி வாசமயிலைப் பெற்றெடுத்த மகள் - எங்களது அரசிளங்குமரியின் பெயர் பீலிவளை, அப் பெயரின் பிற்பகுதியில் என்னைப்பார். ஏதோ காலம் இவ்வா றெல்லாம் நேர்ந்து விட்டது.
"என்ன உன் காலமா?
"பின் என்ன? அரசிளங்குமரி பீலிவளையின்
உயிர்த் தோழியது கையில் விளையாடிய நான் உன் காலால்
உதை பட்டது காலமல்லாமல் என்ன? -
ஏதேது, ஒரு பெருங் கதையே சொல்வாய் போன்றிருக்கின் றதே" 'கதை விட எனக்குத்தெரியாது. வரலாறு கூறுவேன் கேள்' 'மிக மகிழ்ச்சி கூறுக கேட்பேன். வளையல் துண்டு தொடர்ந்தது: 'ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன், அஃதாவது திரு
வள்ளுவப் பெருமானார் தோன்றிப் பின் இரண்டாவது நூற்
றாண்டுக் காலம். அஃதாவது கி.பி. இரண்டாவது நூற்றாண்டு' 'அஃதாவது கி.பி. இரண்டாவது நூற்றாண்டுக் காலம்' . என்றேன் நான்.
2. 'நாகநீள் நகரொடு நாகநாடதனொடு போகநீள் புகழ் மன்னும் புகார் நகர்' -சிலம்பு மங்கல வாழ்த்துப்பாடல்: 21, 22 3. நாகந்நாடு நடுக்கின்றாள்பவன் வாகைவேலான் இIEள
வணன் தேவி வாசமயில் வயிற்றுள் தோன்றிய பீலிவளை’’ - மணிமேகலை காதை 24; அடிகள் 54, 57.
2. சிலம்பு : 1 : 21, 22 3. மணி : 24 : 54 - 57