பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/143

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 6 வ ைள புல்

ஒன்றும் இல்லை

தஞ்சையைவிட்டு நாகர்பட்டின மாம் நாகைக்கு வருவோம். தஞ்சைப் பெருமன்னன் இராசராசன் தொடர்பிலேயே நாகை யைக் காணலாம்.

சோழநாட்டுத் துறைமுகப் பட்டினமாகவும் தலைநகரமாக வும் திகழ்ந்த பூம்புகார் நகரம் கடற்கொந்தளிப்பில் அழுந்தி யது. இது கி.பி 2ஆம் நூற்றாண்டளவில் நிகழ்ந்தது. இதற்குப் பின்னர் நாகர்பட்டினம் சோழநாட்டுத் துறைமுக நகராயிற்று. உலகத்து வாணிகக் களமாக வளர்ந்தது. குறிப்பாகச் சீனநாட் டாரும், கீழ்த்திசை நாட்டாரும் நாகையில் தங்கியும். வந்து சென்றும் வணிகம் செய்தனர் அவர்கள் யாவரும் புத்தமதக் கோட்பாட்டினர். நாகர்பட்டினம் ஒரு நகராக உருவாவதற்கு முன் இவ்விடம் புத்தமதத் துறவிகளின் பெருந்தளமாக இருந்தது 7ஆம் நூற்றாண்டளவில் சீன மன்னன் ஒருவன் தன் நாட்டு. வணிகர் வழிபாட்டிற்கென ஒரு புத்தப் பள்ளியை நாகையில் கட்டினான். அது காலப்போக்கில் காப்பற்றுப் போயிற்று.

கி.பி. பத்தாம் நூற்றாண்டில் கடாரம் என்னும் பர்மா நாட்டினை ஆண்ட சைலேந்திர குலத்தைச் சேர்ந்த குளாமணி வர்மன்’ என்னும் மன்னன் நாகர்பட்டினத்தில் தன் நாட்டு வணிகர்களது வழிபாட்டிற்கென ஒருபுத்த விகாரையைக் கட்ட விரும்பினான்.

அந்நாளில் சோழநாட்டை ஆண்டுவந்த பெருமன்னன் இராசராசனுக்குத் திருமுகம் அனுப்பி அவனது இசைவை வேண்டினான். பரந்த உளப்பாங் குடைய சைவப்பெருமன்ன னாகிய இராசராசன் பெருந்தகவுடன் இசைவளித்தான்.

கி.பி. 1005 இல் குழாமணிவர்மன் தக்காரை அனுப்பி நாகையில் இசைவு வழங்கப்பட்ட இடத்தில் விகாரை கட்டும் பணியைத் துவக்கினான். பணிநிகழும்போதே நாகையில் உறைந்த புத்தத் துறவிகள் இருவர் தஞ்சை சென்று இராச

2, LEGI : 25 2 0.3