உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு 39

'வாயுறை வாழ்த்தே அவையடக் கியலே செவியறி வுறு உவென அவையும் அன்ன’’’

என்பதொரு நூற்பா, இதில் குறிக்கப்படும் 'அவையடக்கியல்' என்பது அவைக்கு அடக்கமாகப் பேசுவதையும் எழுதுவதையும் இலக்கணமாக அறிவிப்பது. சொற்பொழிவுத்துறையில் அவை யடக்கம் கூறுதல் ஒரு தனிப்பண்பு. அதனை அறிவிக்கும் இந்த நூற்பாவில் உள்ள 'வாயுறை வாழ்த்து', 'செவியறிவுறுாஉ எனும் இரண்டும் இங்குச் செய்யுளுக்குரியனவாகக் குறிக்கப் படினும், அவையும் சொற்பொழிவின் ஒரு பகுதியாகவும் அமை பவை. அரசவையில் சான்றோர் எழுந்து நின்று அரசனை வாழ்த்திப் பேசுவதும், அறிவுரை சொல்லிப் பேசுவதும் இப் பெயரிலேயே இலக்கணம் ஆவன. பேசியதை எழுதுவதும், பேசாமலே எழுதியனுப்பப்படுவதும் இங்கே இலக்கணமாகக் குறிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த நூற்பா சொற்பொழிவுத் துறைக்குக் குறிப்பான இலக்கணம் தருவது.

முற்காலச் சொற்பொழிவின் இலக்கணம், இலக்கியம் காட்டல் இங்கு நோக்கம் அன்று. சொற்பொழிவைக் குறிக்கும் அக்காலச் சொற்களையும் தொடர்களையும் காண்டதே நோக்கம்.

'சொற்பொழிவைக் குறிக்க முற்காலத்தில் ஒரு தொடர் இல்லையோ' எனலாம். தொடர் இல்லை; பல தொடர்கள் இருந்தன 'ஏன் பல தொடர்களோ' எனலாம். தமிழில் சொற் பொழிவாக விரித்து உரைக்கப்படும் கருத்துக்கள் வகை வகை யாக இருந்தன. அவ்வவ் வகைக்கு ஏற்ப ஒவ்வொரு முனையும் ஒவ்வொரு பெயர் பெற்றிருந்தது.

இலக்கிய, இலக்கணக் கருத்துக்களை விரித்து உரைக்கப்

படும் சொற்பொழிவு “விரிவுரை” எனப்பட்டது. அறிவுரை யாக வழங்கப்படும் சொற்பொழிவு நல்லுரை' எனப்பட்டது.

2. தொல்-பொருள்-418 3. நன்-23-மயிலை, உரை. 4. மணி- விழாவறைகாதை 59