பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 வளையல் 'ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார்கோவில் ஆண்டி,

அவனுக்கும் இளைத்தவன் பள்ளிக்கூடத்து வாத்தி

என்று குறிப்பிடப்படுதல் மிக அவலத்திற்குரியதாகும்.

கற்பிக்கும் பணிபுரிவோர் இல்லாத ஊர் நலம் பயவாது என்று இருந்த பேச்சுப் போய் ஊருக்கு இளைத்தவனிலும் இளைத்தவனாக ஆக்கியது இச்சொல். இன்னும் இடத்திற்கு இடம் கூட்டத்திற்குக் கூட்டம் இச்சொல் அடியாளாய், போக் கிரியாய், தலைமைக் காவலராய், குத்துச் சண்டை நடிகராய் "வாத்தியாரே என்று அழைக்கப்படுவதைக் கேட்கும் காது ஆசிரியரை எண்ணி அவலப்படுகின்றது.

எனவே, இறுதியாக எஞ்சி நிற்கும் ஆசிரியன் என்னும் சொல் ஒன்றே எல்லா வழக்கிலும் இன்றும் பெருமை குன்றாத தாகக் கற்பிப்போரைக் காட்டி வருகின்றது.

எனவே, கல்வியை வழங்கும் இறைவனை அவனுக்குரிய தகுதியில் குறிப்பிட விரும்புவோர் ஆசிரியன்' என்ற சொல் ஒன்றையே பயன்படுத்தல் ஏற்புடையது என்பது குறிக்கத் தக்கது.

"ஆசான்' - வழக்கில் இல்லை. கணக்காயன்' - வேறு வழக் காயிற்று. 'குரு - வட சொல் தேசிகன் - இனக்குறியாயிற்று. "ஓசன் - ஒதிச் சொல் பணிக்கன் - பழக்கத்திலில்லை. உவாத் தியாயன், வாத்தியார், வாத்தி - இழிவழக்காயிற்று. தனித்த சிறப்புடன் வழங்கப்பட வேண்டியது 'ஆசிரியர்.”

கல்வியைக் கற்பிக்கும் பணியை மேற்கொண்டுள்ள சான்றோரை ஆசிரியர்' என்னும் தனித்தன்மை வாய்ந்த சொல்லாலேயே குறிப்பிடவேண்டும்.

அது கல்விக்குத் திரும் தனிப்பெருமையும் நன்றிக் கடனு மாகும். -