பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானு ற்றுப் புலவர்களும் கற்பனையும் திரு. வெ. சு. அழகப்பன் கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலேச்சிவபுரி புறநானூற்றுப் புலவர்களும், பிற சங்கப் புலவர்களும் இயற்கையொடு ஒருங்கிருந்து வாழ்வு நடத்தியவர்கள். என்ருே கண்டும், கேட்டும் இருந்த பொருளேயும், நிகழ்ச்சிகளேயும் தம் மனத்தே பதித்துக்கொண்டு , வாய்ப்பு வரும்போது தமது பாடல்களில் இணைத்து எழில் தவழச் செய்தனர். இவர்களது கண்ணும் செவியும் மிக மிக நுட்பமும் ஆற்றலும் கொண்டவை. எந்தப் பொருளேயும் ஆழ்ந்து நோக்கித் தன் மனத்தே படியெடுத் தனர். இவ்வாறு கூர்ந்து நோக்கும் இயல்பும், கற்பனையும் இவர்களின் கவி ைதகட்கு மெருகும், அழகும் ஊட்டின. இவற்றைப் படிக்க அக் கால அரசரும், பிறரும் துய்த்து மகிழ்ந் தனர். பல்லாயிரம் ஆண்டுகள் கழித்த பின்னர், நாமும் பயன்று களித்துப் பாராட்டுகின் ருேம். உவமையும், உருவகமுமே கற்பனையின் கண்கள் எனலாம். உவமை, பிற அணிகட்குத் தாயாக விளங்குதலின் தொல்காப்பியரும் செய்யுளியல் என்ற ஒர் இயல் செய்தும் உவமையியல் என மற்றுமோர் இயல் விரித்து விளம்பினர். உயர் கற்பனையின் சிறப்பிற்கு உவமை கருவாக விளங்குதலின் அவ்வுவமைகள் பற்றி இங்கு விளங்க விரித்துரைக்கப்பெறும், சங்ககால உவமையும்-சிறப்பும் சங்க காலப் புலவர்கள் தமது கருத்தை மிகவும் வலியுறுத் திச் சொல்ல வேண்டிய இடங்களிலெல்லாம் மிக அழகிய உவமைகளைக் கையாண்டனர். உவமைப் பொருளுக்கும், உவ 115

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/123&oldid=743240" இலிருந்து மீள்விக்கப்பட்டது