பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரலிரும்பொறை ஆகியோராவார். இவர்களே பதிற்றுப் பத்து 7, 8, 9 ஆம் பத்துக ளில் வருகின்ற அரசர்கள். இச் செல்வக் கடுங்கோ வாழியாதனும், பதிற்றுப்பத்து இரண்டாம்பத்தின் பாட்டுடைத் த&லவனை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் வேளாவிக் கோமான் பெண்களேத் திருமணம் செய்து கொண் டார்கள் , எனவே அவ்விருவரும் ஒரே காலத்தைச் சார்ந்தவரா வார்கள். (புகளுர் கல்வெட்டின் படி) இமயவரம்பன், நெடுஞ்சோ லாதன் கி.பி. இரண்டாம் நூற்ருண்டைச் சேர்ந்தவகை இருப் பின்,அவன் தந்தை பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் எந்த நூற்ருண்டைச் சார்ந்தவனுக இருக்கவேண்டுமென்பது கூரு மலே விளங்கும். இப் பெருஞ் சோற்றுதியஞ் சேரலாதனே புறநானூற்றில் முதல் சேர அரசகை வருகின்றன். அவனுடன் ஒத்த காலத்தில் ஆண்ட பாண்டிய அரசன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதியாவான். இம் முறையைப் பின்பற்றி அடுத்து வருகின்ற பாண்டிய அரசர்களையும் பிரித்துணரலாம். அடுத்து வருகின்ற பாண்டிய அரசன், கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழு தியாவான். அவனே ஐயூர் மூலங்கிழார் என்ற புலவர் பாடியுள்ளார் (21). பாண்டியன் கைப்பற்றிய கானப் பேரெயில் என்ற இடத்திற்காக, அதை உரிமையாகப் பெற்றிருந்த வேங்கை மார்பன், அதனே இரும்புண்ட நீரினு மீட்டற் கரிதென எண்ணி வருந்தின்ை, எனப் புலவர் பாண்டி யனின் பேராற்றலைப் புகழ்ந்து பாடியுளளார். இவனே நல்லிசைச் சான்ருேராகிய ஒளவையாரும் பாராட்டிப் புகழ்ந்துள்ளார் (367): பாண்டியன் கூடாகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி அடுத்த பாண்டிய அரசவைான். இவன் கூடாகாரம் என்ற இடத்தில் தன் இன்னுயிாநீத்த காரணத்தால் இப்பெயர் பெற்றன். இவனைப் பாராட்டியுள்ள புலவர்கள் இருவராவர் - ஐயூர் முடவர்ை, மருதனிள நாகர்ை. ஐயூர் முடவர்ை இவன் வெற்றிச் சிறப்பைக் குறித்து " நீர்மிகிற் சிறையு மில்லே தீமிகின் மன்னுயிர் நிழற்ற நிழலுமில்லே - வளிமிகின் வலியுமில்லே யொளிமிக்கு அவற்ருே ரன்ன சினப்போர் வழுதி ” 124

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/132&oldid=743250" இலிருந்து மீள்விக்கப்பட்டது