பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்ணிையல் காட்டும் பதிற்றுப்பத்தின் காலம் திரு. க. ப. அறவாணன் பச்சையப்பன் கல்லூரி, சென்னே 0. (). பழந் தமிழர் பல்துறை அறிஞராய் விளங்கினர். அவர் தம் உயிரியல், பயிரியல் முதலான அறிவியல் துறைகள் ஆராயப் பட்டது போல ஏனைய துறைகளும் ஆராயப்பட வேண்டும். சிறப்பாகப் பழந்தமிழரது வானியல் அறிவும் கணிக இயல் -ø¡Åĵøgıĥ (Astronomy and Astrology) 3=[āi <sùuirášć5@I56īr eobúð Þ ĝi, அகன்று, உயர்ந்து கிடக்கின்றன. ஐம்பூதங்கள் பற்றியும். மழை உண்டாதல் பற்றியும், ஆறு பருவங்கள் பற்றியும், இப்பருவம் உள்ளிட்ட பொழுதுகள் பற்றியும், அப்பொழுதுகளில் நேர்ந்த இயற்கை மாற்றங்களைப் பற்றியும் பழந்தமிழர் அறிந்திருந்தனர். நாள் மீன்களைப் (Stars) பற்றியும், கோள் மீன் களேப் (Planets) பற்றியும் பரவலாகக் குறித்திருக்கின்றனர். வானியல் அறிவை அடிப்படையாக ಣ್ಣ காலத்தைக் கணித்திருக்கின்றனர். அவ்வாறு கணிப்பவர், கணி’ என்றும், கணியன்’ ஒன்றும், 'பெருங் கணி’ என்றும் அழைக்கப்பட்டிருக்கின்றனர். அரச னுக்குத் துணையாகப் பணியாற்றும் ஐம்பெருங் குழுவில், கணி யரும் அடங்குவர் என்று சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர் சுட்டிக் காட்டுகிறர். கணியன் பூங்குன்றனர் என்பவர் பழந் தமிழ்ப் பாவலர்களுள் ஒருவர். கணியன நினைவூட்டும் ஊர்ப் பெயர்களே இன்றும் தமிழ் நாட்டில் வழங்குகின்றன. கணியம் பாடி, கணியனுர், கணியூர் முதலியன சான்று. 135

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/143&oldid=743262" இலிருந்து மீள்விக்கப்பட்டது