பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வாறு நிறைந்த சொல்வளமும் நிரம்பிய தெளிவுத் திறமும் கொண்ட பைந்தமிழ் வாயிலாகக் கல்வி கற்ருல் மாணவர் தம் உள் ளத்தில் தாம் படிக்கும் கலே, அறிவியல் பாடங்கள் நன்கு பதிந்து அவை புதிய சிந்தனை வேர்களைப் படரவிடும். அறிவியலில் வழங்கப்படும் குறியீட்டு மொழிகள் எல்லா மொழிகளுக்கும் பொதுவானவை. அவை ஆங்கில மொழியின் சொந்தச் சொத்துக்கள் அல்ல. அறிவியல் படிக்க ஆங்கில மொழி அறிவு இன்றியமையாதது என்று 22-11-70 அன்று 'இந்து” நாளேட்டின் ஆசிரியர் கடிதப் பகுதியில் எழுதிய எஸ். இராமன் என்பவருடைய கருத்தை மறுக்கும் வகையில் எங்கள் கல்லூரி இரசாயனப் பேராசியர் டாக்டர் எஸ். வி. அனந்தகிருஷ்ணன் அவர்கள் 25-11-70 அன்று அந்நாளேட்டின் ஆசிரியர் கடிதப்பகுதியில் “The language of science is not English. Each science has its own language with only a formal grammatical link with English or any other languages”. என்று எழுதியுள்ள மை அறிவியல் குறியீட்டு மொழி ஆங்கில மன்று என்ற உண்மையைப் புலப்படுத்தும். தமிழில் ரசாயனம் என் ருல் தண்ணிரில் ஹைட்ரஜன் அனுக்கள் 2 பங்கும் ஆக்சிஜன் அணுக்கள் 1 பங்கும் கலந் துள்ளன என்பதைக் குறிக்கும் ரசாயனக் குறியீட்டுச் சொல் லாகிய H , O என்பதைக் அப்படியே பயன்படுத்தப் போகிருேம். ஆங்கிலத்தில் எட்டாவது எழுத்து H ஆகவே தமிழில் உயிர் எழுத்து வரிசையில் எட்டாவதாக உள்ளது 'ஏ'. ஆகவே அதைத் தமிழ் ஆர்வம் காரணமாக ஏ.0 என்று குறிக்கவேண்டும் என்று யாரும் சொல்லப் போவதில்லை. அப்படிச் சொல்லும் அளவிற்குத் தமிழாசிரியர்களோ பயிற்சி மொழி தமிழாக வேண்டும் என்று சொல்பவர்களோ 'கீழ்ப்பாக்கங்களல்லர்”. தமிழில் கணி தம் என் ருல் (a , b)* என்பதை ( அ + ஆ)" என்று யாரேனும் மாற்றி அதன் விரிவை அ | 2 அ ஆ | ஆ என்று எழுதுவோர்களோ என்று ஆங்கிலமே பயிற்சி மொழியாக இருக்க வேண்டும் என் 1 5 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/159&oldid=743279" இலிருந்து மீள்விக்கப்பட்டது