பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஜனயாகக் கொண்டமையால்தான் பரிமேலழகர்க்குப் பிழை யாகத் தோன்றிற்று. மணக்குடவர் ‘தகையவாய் என்னும் விஜனயெச்சம் மொழிவது” என்னும் தொழிற் பெயர் கொண்டு முடிந்தது போலக் கருதி எழுதிய உரை பொருத்தமானதே. காதல ரவரில ராக நீ நோவது பேதைமை வாழியென் நெஞ்சு (1242) என்ற குறளில் தோவது தொழிற் பெயராக வந்திருத்தல் போல, அக்குறளில் வரும் மொழிவது? என்பதையும் தொழிற் பெயராகக் கொள்ளலாம். இரந்து கோள், பாத்துாண் எனவருந் தொடர்களில் வினையெச்சம் தொழிற்பெயர் கொண்டு முடிந் த ைமபோல, தகையவாய் மொழிவது என ஈண்டும் வினையெச்சம் தொழிற் பெயர் கொண்டு முடிந்ததாகக் கருதவேண்டும். கருதின் 'தகையவாய் எனும் பன்மை மொழிவது என்னும் ஒருமையோ டு இயையாமை நோக்கிற்றிலர்’ என்று கூறும் பரிமேலழகர் மறுப்பு பொருந்தாமை பெறப்படும். அங்கணத்துள் உக்க அமிழ் தற்ருல் தங்க ணத்தர் அல்லார் முன் கோட்டி கொளல். (720) இக்குறட்கு நல்லார் தம்மினத்தார் அல்லார் அவைக் கண் ஒன்ற&னயும் சொல்லற்க; சொல்லின் அது துய்தல்லாத முற்றத் தின் கண் உக்க அமிழ் தினை ஒக்கும் என்று பரிமேலழகர் உரை கூறியுள்ளார். கோட்டி கொளல் என்பதிலுள்ள கொளலே எதிர்மறை வியங்கோள் வினைமுற்ருகக் கொள்வர், மகனெனல்’ (196) என் புழிப் போல. கொளல் என்பதைத் தொழிற் பெய ராக க் கொள்ளுவதே குறள் ந ைடக்கேற்றது. பிறரெல்லாம் கொளல் என்பதனே த் தொழிற் பெயராக்கி உரைத்தார்; அவர் அத் தொழில் அமிழ் து ன் னும் பொருளுவ மையோ டு இயை யாமை நோக்கிற்றிலர் என்று கூறித் தொழிற் பெயராகக் கொண்டு எழுதியோர் உரையை மறுத்துள்ளார். கொளல் என் பதஜனத் தொழிலாகக் கொள்ளின் உவமையிலும் தொழிலாக 'அமிழ்து உகுத்தற்றல்’ என்பது பட வருதல் வேண்டும் என்பது பரிமேலழகர் கருத்து. வேண்டற்க வென்றி.டி னும் சூ தினே வென்றது உம் தூண்டிற்பொன் மீன் விழுங்கி யற்று - (931) 188

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/196&oldid=743320" இலிருந்து மீள்விக்கப்பட்டது