பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்குக் கொடுக்கப்பட்ட எண்கள், தொடர்களின் அமைப்பு மாறியமையை விளங்கக் காட்டும். 2. தொடர்களின் புறவடிவ அமைப்பிற்கும் (Surface structure) அவற்றுள் புதைந்துள்ள வடிவ அமைப்பிற்கும் (Deep structure) இலக்கணம் கூறுவதே மாற்றல் இலக்கணம் என்பர் இன்றைய அறிஞர்". தொல்காப்பி யர் தடுமாறு தொழிற் பெயரைப் பற்றிக் கூறும்போது, அதற்கு இரண்டாம் வேற்றுமை உருபும் மூன்ரும் வேற்றுமையுருபும் தனித்தனித் தம் பொருளேத் தந்து சேர்ந்து நிற்கும் என்ருர்". இங்குப் புலிகொல் யானே என்னும் தொடர் எடுத்துக் காட்டப் படுகிறது. இத்தொடரின் புறவடிவ அமைப்பிற்கு அன்று தொல்காப்பியர் இவ்விலக்கணம் கூறியது. கொல்லுதல் தொழில் புலி, யானை - இரண்டிற்கும் உரியது ஆதலின், ஒருகால் புலி யுடனும், ஒருகால் யானையுடனும் இயைந்து தடுமாறுவதாகிய கொல்’ என்னும் வினே, யானையுடன் இயையுங்கால், இத் தொடரில் புதைந்திருக்கும் தொடர், யானே புலியைக் கொன்றது என்பதாகும் அது புலியுடன் இயையுங்கால், புதைந்திருக்கும் தொடர், புலி யானை யைக் கொன்றது என்பதாகும். இது மாற்றல் இலக்கணத்தால், புலியால் யானே கொல்லப் பட்டது என மாறும். ஆகவே தொல் காப்பியர் இரண்டாம் வேற்றுமை, மூன்ரும் வேற்றுமைகளின் உருபுகள் இங்குச் சேரத்தக்கன என்று கூறிஞர். புலிகொல் யானே என்பது புறத்தில் ஒரு பெயர்த்தொடர். இது ஒரு பெயர்ச் சொல்ல ஒத்தது என்பது தொல்காப்பியர்க்கும் உடன்பாடே! ஆல்ை இதனுட் புதைந்துள்ள தொடர்கள் இரண் டாம் வேற்றுமை, மூன்றம் வேற்றுமை இயைபுள்ள ஒரு வாக்கி == - 1. Any grammar which claims to assign both a deep structure analysis and a surface structure analysis to the sentences it generates is a transformational grammar. John Lyons, “Introduction to Theoritical Linguistics, p. 266– 1968. 2. தொல். சொல். வே. மய. 12. 200

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/208&oldid=743333" இலிருந்து மீள்விக்கப்பட்டது