பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டார், நாயை ஞமலி என்பார் பூமி நாட்டார், வஞ்சரைக் கையர் என்பார் கற்கா நாட்டார், வளி என்று சொல்ல வருகின்ற இடக்கர் முதலிய கருத்துக்களைத் தந்து இப்பகுதிகளின் பிரதேச வழக்குகளே இலக்கண உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். தமிழ் இலக்கியங்களுக்கு உரை விளக்கம் தரும் பண்டைய உரையாசிரியர்களும் சிறுமியர்’ என்பது குடநாட்டார் வழக்கு, பனி என்பதோர் நோயுண்டு” என்ற குறிப்புக்களைத் தருகின்றனர். இக்குறிப்புக்கள் எல்லாம் தமிழ் இலக்கண இலக்கியங்களே விளக்குகின்ற முறையில் எழுந்துள்ளவை என்பது குறிப்பிடற்குரியது.

திராவிட மொழிகளே ஆராய்ந்த மேனாட்டு அறிஞர்களுக்குத் திராவிடமொழிக் குடும்பம் ஆரியமொழிக் குடும்பத்தினின்றும் வேறுபட்டது என நிறுவுதற்கு இம்மொழிகளின் ஒப்பீட்டாராய்ச்சி துணை செய்தது. மூலத் திராவிடமொழி ஒன்றை ஊகித்து அதன் நிலைகளைத் துணியவும் இவ்வொப்பீட்டாராய்ச்சி வழி அவர்கள் முயன்றனர். இவ்வொப்பீடு வழியிலேயே இம்மொழிகளின் இலக்கண நிலைகளை ஆராய்ந்து பல நூற்கள் இன்றும் எழுதப்படுகின்றன.

தமிழ் இலக்கண விதிகளையும் சொல்லமைப்புகளையும் குறிப்பிட்டு மலைநாட்டுத் தமிழின் இலக்கணத்தை வகுகின்றது லீலாதிலகம். கேரள பாணினியமும் தமிழோடு ஒப்பிட்டு மலையாள மொழியின் தனித்தன்மையை நிறுவுகிறது. இம்முறையில் மலையாள மொழி இயல்பை ஆய்ந்த எல். வி. ராமசாமி ஐயரையும் இங்கு குறிப்பிடவேண்டும். இன்றைய தமிழ் இழந்துவிட்ட சிறுக்கன், குட்டன், முதலிய பழந்தமிழ்ச் சொற்களை மலையாள மொழி இன்றும் வழக்கில் வைத்தாளுதலும் சிறப்பாக எடுத்துரைக்கப்படுகின்றது. மலையாள மொழி இடைக்காலத் தமிழினின்றும் பிரிந்து தோன்றியது என்பதை நிறுவ,

எனக்கு நீ செய்யத்தக்க கடனெல்லாம் ஏங்கி ஏங்கி உனக்கு நான் செய்வதானேன் என்னின் யாருலத்துள்ளார்

என்ற கம்பன் பாடலையும், 204

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/212&oldid=1405119" இலிருந்து மீள்விக்கப்பட்டது