பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிமேல்முகடுரையில் வருவித்தல் திரு. டி. சீனிவாசவ ரதன் அலிகார் 1-0. பைந்தமிழில் பாடல்கள் பல புனைந்து தம்புகழை நிலை நாட்டிய பாவலர் பலர் உளர். அப்பாடல்களுக்கு உரை வகுத்துத் தமிழகச் சரித்திர ஏட்டில் நிலே பெற்ற பெயரையுடையாரும் பலருண்டு. இவ்விரு திறத்தாருமே சில சட்ட திட்டங்கட் குட்பட்டுத் தமது ேொழிலச்செய்தனர். பாடல் புனையும் கவி ஞன் யாப்பமைதி பெறப்பாடுகிறன். எனினும் பலவிடங்களில் எழுவாய், செயப்படுபொருள், எச்சங்கள் ஆகியவற்றைக் கூருது விட்டுச் செல்கிருன். குறட்பாப் போன்ற சிறு பாவகையில் சொற்சிக் கனம் வேண்டி இந்நிலை ஏற்படுவது இயல்பே. அவ் வாறு கூறப்படாது விடப்பட்ட சொற்களே உரையாசிரியன் வருவித்துப் பொருள் கூறவேண்டியிருக்கிறது. சூத்திரம் போல மைந்த பாடல்களுக்குப் பொழிப்புரை அல்லது பதவுரை கூறும்போதே சொற்களே வருவித்துக் கூறுவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியுளது. விளக்கவுரை எழுதும்போது சொற்களே வருவித்தல் பற்றிய கேள்வியே எழ வழியில்லை. ஆகவே சிறந்த நூல்களுக்குப் பொழிப்பு அல்லது பதவுரை எழுதுங்கா லே உரை யாசிரியர் ஏற்புடைச் சொற்களை வருவித்து எழுதுவர். இக்கட்டுரையில் பரிமேலழகர் திருக்குறட்கு உரைவகுக்கும் போது எவ்வெவ்வடிப்படையில் சொற்களே வருவித்தார் என்ப கனே க் தொகுத்துக் காட்டுவதே எமது நோக்கமாகும். பரிமேலழகர் சொற்களை வருவிப்பதற்குக் கூறும் காரணங்களில் 'அதிகாரத்தான் வருவிக்கப்பட்டது' என்பதும் 337

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/345&oldid=743485" இலிருந்து மீள்விக்கப்பட்டது