பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தகைய மூன்று சாராருக்காகவும் மூன்று மழை பொழிவ துண்டு என்பதே தமிழர்கள் அன்று கண்ட நெறியாகும் - கொண்ட நம்பிக்கையுமாகும்.

செங்கோல் கோடியோ செய்தவம் பிழைத்தோ

கொங்கவிழ் குழலார் கற்புக் குறை பட்டோ நலத்தகை நல்லாய் நன் ெைடல்லாம் அலத்தற்காலே ஆகியது அறியேன்” என விளக்கம் தருகிறது மணிமேகலை. தெய்வம் தொழாதவளாய்க் கணவனேயே கடவுள் எனக் கொண்ட கண்ணகி, மழைவளந் தரும் ஆற்றல் பெற்றவள் என்பதை அறிந்தே செங்குட்டுவன் அவளுக்குச் சிலே அமைத்து வழிபட்டான். அவிசொரிந்து ஆயிரம் வேள்விகளே மேற்கொண்டால் மழையுண்டு என்பது ஆரியர் கண்ட நாகரிகம். தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்’ ஆக விளங்கிய ஒருத்தி - கண்ணகி - பெய்" என ச் சொன் ல்ை மழை பொழியும் (உண்டு) எனப் போற்றிப் பெண் மைக் குச் சிறப்பளித்ததுதான் தமிழர்கள் கண்ட நாகரிகம் ஆகும். கண்ணகிக்குச் சிலே எடுத்தல் வேண்டும், - “............நம் அகல் நாடு அடைந்த இப் பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்,' எனச் செங்குட்டுவனின் துணை வியாக விளங்கிய மாபெருந்தேவியாம் இளங்கோ வேண்மாள் வலியுறுத்திக் கூறியதையும் இங்கு நாம் நினே விற் கொள்ளுதல் வேண்டும். இளங்கோவடிகள் நோக்கம் : தொல்காப்பியர் காட்டிச் சென்ற நெறியினின்றும் பிறழ்ந்து விடாமல், கற்பிற் சிறந்த கண்ணகிக்கு வழிபாட்டுத் தகுதியை அளிப்பதே-உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துமாறு செய்வதே-நூலாசிரியர் குறிக்கோள் ஆகும் , “The deification of Pattini is the deification of women and has therefore an eternal value. The cult of Pattini or the chaste is the religion of Cilappatikaram.” எனவே, மூன்ருவது 28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/36&oldid=743501" இலிருந்து மீள்விக்கப்பட்டது