பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்கள் கி. மு. ஐந்தாம் நூற்றண்டில் நாடகக் கலையை வளர்த்துள்ளனர். ஆப்பிரிக்கா : மதவிழாவில் செய்து காட்டிய கோமாளி யின் விகடங்களே இந் நாட்டின் நாடகத் தோற்றத்திற்குக் காரணமாக அமைந்திருக்கின்றது. ரோமானிய சக்கரவர்த்தி கரகல்ல வைத் (caracalla) தாக்கி எழுதப்பட்ட வசை நாடகமும், பிற வசை நாடகமும் நகரெங்கும் நடைபெற்றிருக்கின்றன. கி. பி. 616 இல் நானுாறு அரங்கங்கள் இருந்தனவாகத் தெரிய வருகிறது. ரோம் : இந்நாட்டின் நாடகத் துவக்க மும் மதவிழாவில் இருந்து தோன்றியதாகவே தெரிய வருகிறது, கி. மு. 365 இல் இந் நாட் டில் பரவிய ஒரு தொத்து வியாதியைப் போக்க இஸ்டிரியன் களை யூட்டுரீயாவில் இருந்து அழைத்துவர அவர்கள் பாட்டுப்பாடி நடித்துக் காட்ட அதன் மூலம் இந்நாட்டில் நாட கம் அடியெடுத்து வைத்தது என் கின்றனர். இவர்கள் வருகைக்கு முன் மதவிழாவில் நகைச் சுவை பாடல்கள் அல்லது கதைகள் பாவத்துடன் நடித்துக் காட்டப்பட்ட ன. சாட்டுர் (Sacurae) என்று இத8ன அழைத்தனர். கிரேக்கத் தோடர்பால் ரோமானிய நாடகம் வளர்ந்தது . எ பிச் சார்மஸ் (கி. மு. 540-450) லிவியஸ் அன் ட்ரோனிக்க ஸ் என்னியஸ் (கி. மு. 239-169) முதலியவர்கள் சிறந்த ரோமானிய நாடக சிரியர்கள் ஆவார்கள். கி. மு. 154 இல் ரோமில் ஒழுங்கான நாடகத் தியேட்டர் கட்டப்பட்டிருக்கிறது. ஜப்பான் : எரிமலைக் குழப்பம் நிகழா வண்ணம் சாம்பசோ என்ற நடனத்தை பயில் கிருர்களாம். அந் நடனம்தான் நாட கத் தோற்றத்திற்குக் காரணம் என்று ஒரு சாரர் கூறுகின்றனர். மற்ருெரு சாரார் பிற நாடுகளேப் போலச் சமயத் தொடர்புடைய தாகவே நாடகத் தோற்றம் இருந்தது என்றும் ஆதியில் சமய விழாச் காலங்களில் நிகழத்தப்பெற்ற ககுரா” (Kagura) என்ற பொம்மலாட்டம் போன்ற நிகழ்ச்சிகளில் இருந்து நாடகம் தோன்றியது, என்றும் கூறுகின்றனர். பண்டை நாளில் ஜப்பானில் ஒருவர் ஒரு கதையை நாடகபாணியில் கூறுவாராம். 463

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/470&oldid=743624" இலிருந்து மீள்விக்கப்பட்டது