பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115

"பொறிவாயி லிவ் வைந்தினேயும் அவியப் பொருது’’ என்ற இரண்டாவது பாடற் பகுதியில், பொறிவாயி ஜலந் தவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறி' என்ற குறளின் சொல் லும் பொருளும் அமைந்திருக்கும் மாட்சியைக் காணலாம். 'அவியப் பொருது’ என்றதன் பயன், அவிந்து அப்பொப் தீர் ஒழுக்க நெறியின் கண் நிற்றலே ஆகும்.

மூன்ருவது பாடலில் அற்ருர் பிறவிக்கடல் நீந்தி ஏறி, என்ற வரி, பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறை வனடி சேராதார்’ என்ற குறளை நினைப்பிக்கிறது.

7-ஆவது திருப்பாடலில் இறைவனை அகர முதலின் எழுத்தாகி நின்ருய்’ என்று சுந்தரர் விளிப்பர். எழுத்துக் கள் எல்லாவற்றுள்ளும் விரவியும், எழுத்துக்களுக்கு முதலி லும் அகரம் நிற்கும். அங்ங்னமே இறைவனும் உயிர்கள் தோறும் விரவி நின்று, தான் முதலும் ஆகவும் நிற்பன்டனன் பது இவ்வரியின் பொருளாகும். திருவள்ளுவரும், 'அகர முதல வெழுத்தெல்லாம், ஆதிபகவன் முதற்றே யுலகு’ என்ருர். பின்னர் வந்தருளிய சந்தானுசாரியர்களுள் நான்காமவராகிய உமாபதி சிவாசாரியர், திருவருட்பயன் என்னும் சாத்திர நூலில், அகர உயிர்போல் அறிவாகி எங்கும் நிகரிலிறை நிற்கும் நிறைந்து” என்றருளினர். திருவள்ளுவர் குற8ளயும் திருவருட்பயன் குறளையும் முதுமொழிமேல் வைப்பு என்னும் நூலின் ஆசிரியர் வெள்ளியம்பலவாண முனிவர் எடுத்த ாண்டு இறைவன் தானே தனித்தும் ஏனையுயிர்களோடு கலந்தும் இருக்கும் நிலையை விளக்கியிருக்கிறர். அப்பாடல்கள் வருமாறு:

‘எங்கும் உளனிறைவன் என்றிரண்டாய் ஏத்துதமிழ்ச்

சிங்கம் நடந்தவழிச் சித்தாந்தம் - என்றது அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு"