முன்னைத்தவம் வேண்டும்
உண்டென்றிரு அவன் ஒன்றென்றிரு’ என்பர் சிலர்: அவன் திருநாமம்-சிறப்பாகச் சிவநாமத்தைக் கூறுவர் சிலர்; அங்ங்னம் சிறப்புப் பெயரால் கூரும்ல் இறை கடவுள் என்ற பொதுப்பெயர் மட்டுமே கூறுவர் சிலர்; சிறப்புப் பெயரை ஏன்று கொளினும் மானதமாகக் கூறலேசாலும் என்பர்சிலர்; உரத்துக் கூறல் வேண்டா என்பதோடு உரத்துக் கூறவும் கூ சுவர் சிலர்; பழிப்போர் சிலர். தீவினையாளரே இங்ங்னம் இருப்பர். சிவ ரி.வ என்கிலர் தீவினையாளர் என்பர் திரு மூலர்; முன்னர்ச் செய்த நல்வினைப் பயன் சிறிதே தோன்றி னும், இறைவன் திருநாமத்தை (எந்தையார் திருநாமம் நமச்சிவாய, திருநாம அஞ்செழுத்துக் கூறத்தோன்றும். எனவே சிவ நாமத்தைப் பயிலுவதற்கு முன்னேத் தவம் மிகுதி யாக வேண்டும் என்பர் சுந்தரர், பண் டேநான் செய்த பாக்கியத்தால் பரஞ்சோதி நின்னமம் பயிலப்பெற்றேன்' என்றமை காண்க.
திருக்களிற்றுப்படியாக்
இது சைவ சித்தாந்த சாத்திரம் பதின்ை கனுள் ஒன்று; திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனர் என்பவரால் அருளப் பெற்றது. இந்நூல் 70-ஆம் பாடலில் திரு ஞானசம்பந்தர் திரு வரத்துறையில் சிவிகை பெற்ற வரலாறு குறிக்கப் பெற்றுள் ளது. அப்பாடல் வருமாறு:
ஒடம் சிவிகை உலவாக் கிழியடைக்கப் பாடல் பனே தாளம் பாலை நெய்தல் - ஏடெ திர் வெப்பு என்புக் குயிர்கொடுத்தல் ஈங்கிவைதாம் ஓங்குபுகழ்த் தென் புகலி வேந்தன் செயல்.
திருப்புகழ்
அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ்ப் பாடல் ஒன்று திரு நெல்வாயில் திருவரத்துறைக்கு உண்டு. கறுவி” என்று