பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/157

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

வழிமுறை நுவலப்பெறுகின்றது. இவற்ருல் ஞானுமிர்தம் என்ற நூலே அருளிச் செய்தவரைத் தலைவராகக்கொண்ட சைவாசாரிய பரம்பரையொன்று நிலவியது என்றும் அறியக் கிடக்கின்றது.

இக்கல்லெழுத்தில் குறிக்கப்பெற்ற வாகீசுவர பண்டிதர் சோம சித்தாந்தத்தைப் பிறர்க்கும் எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவர் என்று அறியப்பெறுகின்றது. கோளகி மடத்தைச் சேர்ந்த சோமசம்பு சிவாசாரியார் என்பார் சோமசம்பு பத்ததி 28 என்ற நூலே எழுதியவர். இச் சோமசம்புபத்ததி முதலான நூல்களில் கூறப்பெற்ற செம்பொருள்களை விரித் துரைத்தலில் வல்லுநராயிருந்தமைப்பற்றி இவர் சோம சித்தாந்தம் வக்காணிக்கும் வாகீசுவர பண்டிதர்' எனப் பெற்ருர்.

இவ்வாகீச பண்டிதரே ஆளுடைய நம்பி ரீ புராணத்தை விரிவுரை செய்தார் என்று கருதுபவருமுண்டு'; عيDH تئيI பொருந்தாது. இவரும் பிறருடனிருந்து ஆளுடையநம்பி

28 சிவாகமங்களிலுள்ள கிரியாகாண்டப் பொருள்களைத் திரட்டி முறையாக வரிசைப்படுத்திப் பத்ததி என்னும் பெயருடன் 18 பத்ததிகள் 18 சிவாசாரியர்களால் செய்யப் பெற்றுள்ளன. அவர்களுள் ஒருவர் சோமசம்பு சிவாசாரியர். பத்ததி என்ருல் வழி என்று பொருள். எனவே சோமசம்பு பத்ததி என்ருல் சோமசம்பு சிவாசாரியார் கண்ட வழி என் பது பொருள். இந்நூலுக்குக் கிரியாகாண்டக்ரமாவளி என் றும் பெயருண்டு. இந்நூல் அசிந்திய விசுவ சாதாக்கியம் என்னும் ஆகமத்தை ஆதாரமாகக்கொண்டது. இதன் முடி வில் 4 சுலோகங்கள் உள்ளன. முதல் சுலோகத்தில் ஆசிரியருடைய குருபரம்பரை விளக்கப்பெற்றது; அடுத்ததில் இவர் கோளகி மடாதிபதி என்றுள்ளது; நான்காவதில் ரீ விக்ரமன் என்ற அரசன் காலமாகிய சகாப்தம் 811ல் 2000 சுலோகங்கள் கொண்ட இந்நூல் செய்யப்பட்டது என்று கூறப்பெற்றது. இந்நூலில் கூறப்படுவன நித்தியம், நைமித் தியம், காமியம் என்பனவற்றின் விதிகளாம்.

29 ஞாளுமிர்தம், முகவுரை பக்கம் XXVIII.