பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39


நூலறிவு வாத்ய விஷயங்கள் ஆகியவற்றுள் வத்ஸராஜன் போன்றவன்; வாமவிலோசனர் (பெண்கள்) நடுவில் காமன்; கவி புனைவதில் வல்லவன்; தந்திரங்களில் (பிரஸ்பதி) நயபரன்; மக்களை மகிழ்விப்பதில் தருமன் (யுதிஷ்டிரன்); பல்லவ குலத்தைக் காப்பவன்; சாத்விக சார்வபௌமன் (பிறவி மன்னன்); மற்போரிலும் விநயகுணங்களிலும் உயர்ந்தவன்; பீம வர்மன் மரபில் ஹிரண்ய , வர்மனது மகன். அரிசரணபரன்; தூய தாய் வயிற்றில் பிறந்தவன்; லக்ஷணங்களை யுடையவன்; ரோஹிணியின் மகன்; நரேந்திரன்.

பரமேஷ்டியின் பாதபங்கயத் தூளியைத் தன் தலையில் தரிப்பவன்; தேவர்களையும் பிராமணர்களையும் பூஜை செய்பவன்; கலியின் கொடுமைகளினின்று விடுபடுபவன்; பகை மண்டலங்களை வன்மை என்னும் நெருப்பால் கொளுத்துபவன்; மித்ரமண்டலங்களை அன்பு நீர்பாய்ச்சி வளர்ப்பவன்; ஒரு கை எல்லா புவனங்களையும் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறது. வணங்கும் அரசர்களது முடிகளின் மணிகள் இவனது திருவடிகளில் படுகின்றன. இவன் கற்பக விருக்ஷம் போன்றவன்; க்ஷத்திரிய மல்லன்; பல்லவ மல்லன்; பப்ப பட்டாரகரின் திருவடிகளைத் தியானிப்பவன்: நந்திவர்மன் என்னும் பெயரினன்; பெருங்குணக் கடலைப் பொங்கியெழச் செய்கின்ற திங்கள் போன்றவன்; மகாராஜன். ராஜாதிராஜ பரமேசுவரன்.

ஜேஷ்டபாத சோமயாஜி

தானம் பெற்றவர், ஜேஷ்டபாத ஸோமயாஜி என்று வட மொழிப் பகுதியிலும் (வரி 93), தமிழ்ப் பகுதியில் (103) செட்டிறெங்க ஸோமயாஜி என்றும் குறிக்கப் பெற்றுள்ளார். இவர் கடல் போன்ற வேதங்களைக் கற்றவர்; இனிய ரசம் பொருந்திய ஸாம வேதத்தைத் தனது ரசத்தால் கானம் செய்பவர்; கல்பம் வியாகரணம் ஜோதிஷம் நிருக்தம் சிக்ஷை சந்தஸ் ஆகிய ஆறு வேதாங்கங்களையும் செம்மையாக அத்யயனம் செய்தவர்; பதம் வாக்கியம் பொருள் ஆகியவை நன்கு அறிந்-