பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40


தவர்; சுருதிஸ்மிருதிகளைக் கரைத்துக் குடித்தவர்; கர்ம காண்ட ஞான காண்டத்தில் பாண்டித்ப முடையவர்; உலக யுக்திகளையும் கலைகளையும் நன்கு அறிந்தவர்; காவ்யம் நாடகம் இதிகாசம் புராணங்களில் சிறப்பறிவு படைத்தவர்; சர்வ கர்மாநுஷ்டானங்களை யுடையவர்; உலகத்துக்கு விளக்குப்போன்றவர்; மிக்க அடக்கமுடையவர்; இரு பிறப்பாளரிற் சிறந்தவர்; சாந்தோக சூத்திரத்தவர்; பாரத்துவாஜ கோத்திரத்தவர்; வாஜபேயம் முதலிய யாகங்கள் செய்தவர்; துண்டகராஷ்டிரத்தில் பிரமலோகம் போன்ற பூனியம் என்ற ஊரில் வாழ்பவர்; திருவேடந் தரிப்பதில் சிறந்தவர். (-வேஷ விசிஷ்டாய); பாவங்களில் தரித்திரர் (-தோஷ தரித்ராய); ஏக புருஷர் (ஒப்பற்றவர்); ஈருலகங்களையும் சிந்தை செய்பவர்; அறம் பொருளின்பங்களை (- திரிவர்க்கம்) அடைபவர்; நான்கு வேதங்களையும் கற்றவர்; பஞ்சமகா பூதங்களின் இயற்கை அறிந்தவர்;ஆறங்கங்களையும் அறிந்தவர்;பகலவனை ஒத்தவர் (--ஸப்தஸப்தி பிரதிமாய); நற்பண்புகளையுடையவர்; சிறந்த பிராணமர் (- ஸுப்ராஹ்மணாய).

பிரம்மஸ்ரீராஜன்

இச் செப்பேடுகளில் விஜ்ஞப்தியாக இருந்தவன் பிரம்ம ஸ்ரீராஜன் என்பவன். இவன் உலகத்தில் தனி நண்பன் (-லோகைகமித்ராய); கடல் மணிகளையுடையது போல எல்லா நற்பண்புகளை யுமுடையவன்; கர்பீரமுடையவன்; சீரும் திருப்பொலிவும் பொருந்தியவன்; கடுஞ்சொல்லன் அல்லன்; ஆண்களிற் சிறந்தவன்; இந்திரனுக்கு பிரஹஸ்பதி போலப் பல்லவ அரசனாகிய நந்திக்கு முதன் மந்திரி; உருவத்தாலும் நீதியாலும் அழகுடையவன்; அறிஞர்களில் சிறந்தவன்; திண்மையும் வீரமும் உடையவன்; பிரஹ்ம க்ஷத்திரிய குணங்கள் நிரம்பியவன்; சந்திரனும் நக்ஷத்திரங்களும் உள்ள வரை நந்தி போத்தராசாவிடம் பக்தியுடையவன்; குலத்தில் சிறந்தவன்; (குடும்பத்தில்) மூத்த மகன்.