பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
54திருவாபரணங்கன்

ஒலோகமாதேவீச்வரமுடைய மகாதேவர்க்கும், ஒலோக விடங்கதேவர் உள்ளிட்ட திருமேனிகளுக்கும் செய்வித்த பொற்கொள்கை முதலான திருவாபரணங்களும் திருப்பரிகலங் களும் ராசராச சோழனது 24-ஆம் ஆட்சியாண்டுக் ல்வெட் டொன்றில் விவரிக்கப்பெற்றுள்ளன .

பொன்ற்ை செய்யப் பெற்றனவும் மணியும் முத்தும் மிடைந்தனவும் ஆன ஆபரணங்கள் ஒலோகவிடங்கத் தேவருக்கு 18-ம், நம் பிராட்டியார்க்கு 19-ம், பிள்ளை யார் சுப்பிரமணிய தேவருக்கு ஆறும் தரப்பெற்றன.

பொன் மாலைகளில் மூன்ருென் ருக அடுக்கியனவும், ஐந்தொன்ருக அடுக்கியனவும், சுவாமிக்கும் அம்மைக்கும் தரப்பெற்றன. சுவாமிக்கு முகத்தில் கட்டிய நாயக மாணிக்கம், ஒன்று அரைக்கழஞ்சே நாலு மஞ்சாடி எடையுடையது. பொற்கொள்கை குடிளுைக்கல்லால் .ெ ப ா ன் நிறை 327 கழஞ்சு. ஒலோக விடங்கத் தேவருக்குச் சாத்தியருளும் முடி 105 கழஞ்சு. நம்பிராட்டியார் முடி 48 கழஞ்சு. சுப்பிர மணிய தேவருக்குத் தரப்பெற்றவற்றுள் சூலமும் உண்டு.

திருப்புரிகலங்கள்

பொன்னுல் மடலும், வட்டிலும், சாமரைக்கைகளும், ஈச் சோப்பிக்கைகளும், வெள்ளியில் தளிகை மண்டை, கலசம், சட்டுவம் முதலியனவும், செம்பில் தளிகை, காளம், கலசம், முதலியனவும், ஈழச்சியல் விளக்கும். மலையாளச் சியல் விளக்குகளும் சோழியச் சியல் விளக்குகளும், வெண் கலத்தில் தட்டு, சட்டுவம், எறிமணி, தூபமணி முதலியண் வும் அளிக்கப்பெற்றன.

செம்பின்மேல் பொன் கடுக்கின பாவைக் கண்டியில் ஆடுகிற பாவை ஒன்று, உடுக்கை வாசிக்கிற பாவை