பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
74


'எய்தான் சரம் எய்தாவகை

இற்றிகென இடையே வைதாலென ஐதாயின -

வடிவாளியின் அறுத்தான் "ஐ தாதலின் அறுத்தாய்இனி

அறுப்பாய்’ என அழிகார் பெய்தாலெனச் சரமாரிகள்

சொரிந்தான்துயில் பிரிந்தான்” என்கிருன்.

வீடணனுக்கு முடிசூட்டுக என இராமன் இவனே நோக்கி ஆணையிடுவதாகக் கூறும் பாடலிலும் இவன் உறங்காமை சிறப்பிக்கப் பெறுகிறது.

உய்ஞ்சனன் அடிய னேன்என்

றுாழ்முறை வணங்கி நின்ற அஞ்சன மேனி யானே

அழகனும் அருளின் நோக்கித தஞ்சநல் துணைவன் ஆன

தவறிலாப் புகழோன் தன்னைத் துஞ்சலில் நயனத் தைய!

சூட்டுதி மகுடம் என்ருன்’’ என்ற இந்தப் பாடலில் துஞ்சலில் நயனத் தைய!’ என்று இவன் விளிக்கப் பெறுகிருன்.

இவ் வில்லி துஞ்சலில் நயனத்தவனுகச் சிறப்பிக்கப் பெறுவதற்குக் குறிப்பாக ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது. இராம னும் சீதையும் கங்கைக் கரையில் உறங்கியபோது அவர் களுக்கு இடையூறு வாராமல் இரவெல்லாம் இவன் கண் விழித்துக் காத்தான். இச் செய்தியைக் கம்பன்,

  • மாலைவாய் நியமம் செய்து

மரபுளி இயற்றி, வைகல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/81&oldid=980750" இலிருந்து மீள்விக்கப்பட்டது