பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 C ஆரணிய காண்ட ஆய்வு

ஆடுகள் வேள்வியில் கொல்லப்படக் கொண்டு போகப் படுகின்றன என்பதைக் கேட்டறிந்த புத்தர், அந்த நொண்டிக் குட்டியாட்டை எடுத்துத் தோளில் சுமந்தபடி வேள்வியை நிறுத்தும் நோக்குடன் மந்தையின் பின்னே சென்று கொண்டிருந்தாராம்.

இதைக் கண்ட மக்கள், புத்தரின் தோளில் அமர்வதற்கு அவர் பெற்ற குழந்தைச் சிறுவன் பெறாத பேற்றை இந்த நொண்டிக் குட்டியாடு பெற்றுள்ளது என்று வியந்தனராம். கவுதமப் புத்தர் காப்பியம் என்னும் நூலில்,

'சித்தார்த்தன் பெற்றிட்ட சீரி யோனாம்

செல்வமகன் இராகுலனைச் சேராப் பேறு செத்தாலும் கேள்வியிலாச் சிறிய ஆட்டின்

செல்வகொண்டிக் குட்டியினைச் சேர்ந்ததம்மா!' (18: 11) இவ்வாறு, பொன்னாடை பெறாத பேற்றை மரவுரி பெற்று இராமன் இடுப்பை அணி செய்தது.

அணிக்கு அணி

மேலும் சூர்ப்பணகை எண்ணுகிறாள். இந்த அழகானது உடம்பில் சிறந்த அணிகலன்களைப் பூட்டினால், இவனது இயற்கை அழகைக் காட்டிலும் மேலும் அழகு தரா. அந்த அணிகலன்கள் இவனால் அழகு பெறும்.

“காறிய ககை அணி நல்ல புல்லினால்

ஏறிய செவ்வியின் இயற்றுமோ” (24)

இது போலவே, சீதைக்கு அணிந்த கலன்களும் அவளது அழகால் அழகு பெற்றனவாம். எத்தனையோ மங்கையர் அணிந்தும் அழகு பெறாத அணிகள், சீதை தோன்றியதால் இவ்வாறு அழகு பெற்றதாக மிதிலைக் காட்சிப் படலத்தில் கூறப்பட்டிருப்பது ஒப்பு நோக்கத் தக்கது.