பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் ) 133

"ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்னும் மொழிக்கு ஏற்பச் சினம் மிக்கதால் இலக்குவன் இவ்வாறு செய்து விட்டான்.

இதன் பின்பே இலக்குவனுக்குச் சினம் தணிந்ததாம். இதைத்தான் போக்கிய சினத்தொடும் என்று கூறியுள்ளார். கம்பர். திருமுருகாற்றுப்படையில் உள்ள கழிந்த உண்டியர்' என்பதற்கு உண்டி கழிந்தவர் எனப் பொருள் கொள்ளல் போல், இங்கேயும் சினம் போக்கினான் (சினத்தை விட்டான்') எனக் கொள்ளல் வேண்டும்.

நாள் கொள்ளுதல்

வாளால் கொடிய அரக்கியின் மூக்கையும் முலையையும் அறுத்தது, இராவணனின் தலைகளை அறுக்கப் போவதற்கு நாள் கொண்டது போன்று இருந்ததாம்.

'கொலை துமித்து உயர் கொடுங்கதிர் வாளின்

அக்கொடியாள் முலை துமித்து உயர்மூக்கினை நீக்கிய முறைமை மலை துமித்தென இராவணன் மணியுடை மகுடத் தலை துமித்தற்கு நாட்கொண்டது ஒத்ததோர்

தன்மை” (96)

துமித்தல் = அறுத்தல். மலையை வெட்டுவது போல் இராவணனின் தலைகளை வெட்டுவதற்கு நாள் கொண்டது போன்றதாம்.

மன்னர்கள் மாற்றார் நாட்டின்மேல் Լ165) Լயெடுப்பதற்காக நல்ல நாள் குறிப்பர். அந்த நாளில் போக முடியாவிட்டால், தங்கள் குடை, வாள், முரசு முதலிய வற்றை அந்த நல்ல நாளில், இருக்கும் இடத்தை விட்டுப்