பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/172

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


170 m ஆரணிய காண்ட ஆய்வு

அல்லர் - சமணத் துறவிகள் என்று தப்பி ஓடினராம்.

சிலர், வில்லின் நாண் கயிற்றைப் பூனூலாகச் செய்து பூண்டு, நாங்கள் கங்கையாடச் செல்லும் பார்ப்பனர்கள் எனக் கூறித் தப்பினராம்.

சிலர் யானையின் மணிகளைத் தாளமாகத் தட்டிக் கொண்டு, யாங்கள் கலிங்கர் அல்லேம் - தெலுங்குப் பாணர்கள் என்று கூறித் தப்பித்து ஓடினராம் பாடல்கள். (போர்பாடியது)

'வரைக்கலிங்கர் தமைச்சேர மாசை ஏற்றி

வன்தூறு பறித்த மயிர்க்குறையும் வாங்கி அரைக்கலிங்கம் உரிப்புண்ட கலிங்க ரெல்லாம்

- அமணரெனப் பிழைத்தாரும் அநேகர் ஆங்கே’

- (63)

"வேடத்தால் குறையாது முந்நூலாக

வெஞ்சிலை காண் மடித்திட்டு விதியால் கங்கை ஆடப்போங் தகப்பட்டேம் கரந்தோம் என்றே

அரிதனைவிட் டுயிர்பிழைத்தார் அநேகர்

ஆங்கே' (64)

'குறியாகக் குருதிகொடி ஆடை யாகக்

கொண்டுடுத்துப் போர்த்துத்தம் குஞ்சி

முண்டித்து அறியீரோ சாக்கியரை உடைகண்டால் என்

அப்புறம்என் றியம்பிடுவர் அநேகர் ஆங்கே” (65)

"சேனைமடி களங்கண்டேம் திகைத்து கின்றேம்

தெலுங்கரேம் என்று சில கலிங்கர் தங்கள் ஆனைமணியினைத் தாளம் பிடித்துக் கும்பிட்டு அடிப்பாணர் எனப் பிழைத்தார் அநேகர்

. ஆங்கே (66)