பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/187

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் ) 185

இரண்டு மனம்

சீதை என்னும் பெயர் - இராவணனின் மனம் என்னும் இரண்டும் ஒன்றை விட்டு ஒன்றைப் பிரிக்க முடியாதபடி கலந்து விட்டனவாம். எனவே, அரக்கன் வேறு ஒன்றை நினைக்க வேண்டுமெனில், இந்த மனத்தால் முடியாது , இதுவரையும் இல்லாத - வேறொரு மனம் - அதாவது இரண்டாவது மனம் வேண்டும். இந்த மனத்தால் சீதையை மறக்க வழி இல்லை. என்ன செய்வது! மெத்தக் கற்ற வராயினும் மெய்யுணர்வு (ஞானம்) இல்லையேல் காமத்தை வெல்ல முடியாது. எனவே, இந்த இராவணன் எம்மாத்திரம்!

“சிற்றிடைச் சீதை என்னும்

காமமும் சிங்தை தானும்

உற்று இரண்டு ஒன்றாய் கின்றால், ஒன்றொழித்து ஒன்றை உன்ன

மற்றொரு மனமும் உண்டோ

மறக்கலாம்வழி மற்று யாதோ?

கற்றனர் ஞானம் இன்றேல்

காமத்தைக் கடக்க லாமோ?” (84)

சீதையின் வடிவமும் அரக்கனின் மனமும் கலந்தன என்று சொல்லாமல், சீதை என்னும் பெயரும் அவனது மனமும் கலந்ததாகக் கூறியது ஏன்? அவன் இன்னமும் சீதையைப் பார்க்கவில்லை யாதலின் பெயர் கூறப்பட்டது. பெயருக்கே இப்படி எனில், உருவத்தைப் பார்த்துவிடின் எப்படி இருக்குமோ?

மனம் ஒன்றி விட்டதால் சீதையை மறக்க முடியாது அதாவது வேறு எதையும் நினைக்க வியலாது; அப்படி வேறு எதையாவது நினைக்க வேண்டுமாயின், வேறொரு மனம் வேண்டுமாம்.