பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/201

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் 199

செய்யும் வினை

மாரீசன், தன் தாய் தாடகையைக் கொன்ற இராமனோடு போர் செய்யத் தம்பி சுபாகு என்பவனுடன் சென்றான். அப்போரில் சுபாகு இறந்தான். மாரீசன் செத்தோம் - பிழைத்தோம் என்று தப்பி

வந்தான். பின்னொரு

நாள், துணைவர் இருவருடன் மான் உரு கொண்டு இராமனை முட்டிக் கொல்ல முயன்றான்; அப்போதும், துணைவர் இருவரும் மாள மாரீசன் படாத பாடு பட்டு உயிருடன் திரும்பினான்.

இத்தகைய மாமல்லனாகிய இராமன் இருக்கும் இடம் சென்று யான் செய்யத்தக்கது யாதென வினவினான்.

“ஆண்டையான் அனைய கூற;

அரக்கர் ஓர் இருவரோடும் பூண்டஎன் மானம் தீரத்

தண்டகம் புக்க காலைத் தூண்டிய சரங்கள் பாயத்

துணைவர் பட்டுருள அஞ்சி மீண்டயான் சென்று செய்யும்வினை

என்கொல் விளம்புக என்றான்’ (205) பின்னர், எவ்வளவு அறிவுரை கூறியும் கேளாத இராவணனது கட்டளைப்படி மாரீசன் ஒரு பொன்மான் உருவங்கொண்டு சீதை காணும்படி அங்குச் சென்றான்.

விழுதல்

பொன்மானைக் கண்டதும் அங்கிருந்த மான்கள் சில. பல, நிலையான வஞ்சகமே கொண்டு அன்பு என்பது சிறிதும் இல்லாத விலைமகளிர்பால் சென்று விழுபவவர் களைப்போல், காம எண்ணத்துடன் பொன் மானைச்

சூழலாயின.