பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/208

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


206 ஆரணிய காண்ட ஆய்வு

கின்றதே போல நீங்கும்;

நிதிவழி நேயம் காட்டும் மன்றலம் கோதை மாதர்

மனமெனப் போயிற் றம்மா” (244) இப்படி யெல்லாம் மாயம் செய்யும் என்பதை எண்ணிப் பார்த்து, அப்படியே உள்ளது உள்ளபடியே (தத்ரூபமாகப்) படம் பிடித்துக் காட்டியிருக்கும் கம்பர் கவிச்சக்கரவர்த்தியே.

நிதி = செல்வம். நேயம் = அன்பு. மன்றல் = மணம். கோதை - மலர்மாலை. மாதர் = இங்கே விலைமகளிர்.

விலைமகளிர் மனம் எல்லாரிடமும் ஒரே மாதிரியாய்ச் செயல்படாது. அவரவர் தரும் பணத்திற்கு ஏற்ப அவரவரிடம் அன்பு காட்டுதல் ஏறும் - குறையும். இந்த நிலைமை, மாயமானின் மாறி மாறிச் செய்யப்படும் செயல் பாட்டிற்கு ஒப்புமையாக்கப்பட்டுள்ளது.

பொறுத்தருள வேண்டும் - விலைமாதர் நிலைமை மட்டும் இத்தகைய தன்று. பணக்கார விருந்தினரை ஒரு மாதிரியாகவும், ஏழை விருந்தினரை வேறு மாதிரியாகவும் நடத்தும் கீழ்மக்களும் விலைமாதர் போன்றவரே. இதை மேலும் விரிக்கின், ஒரு தனி நூலாக எழுத வேண்டிய அளவுக்கு விரியும்; எனவே விடுப்பாம்.

விட்டழைத்தது

இறுதியாக, இராமன் இது மாயமான் என்று தெரிந்து கொண்டு அதன்மேல் அம்பெய்தான். மான்வாயைப் பிளந்து கொண்டு, எட்டுத்திக்குகட்கு அப்பாலும் கேட்கும் படிக் கூவி அழைத்துக் குன்றுபோல் இறந்து வீழ்ந்தது. அதாவது மாரீசன் வீழ்ந்தான்.