பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/209

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் 0 201

"கெட்டிலைச் சரம் வஞ்சனை நெஞ்சுறப் பட்டது அப்பொழுதே பகு வாயினால் அட்ட திக்கினும் அப்புறமும் புக விட்டழைத்து ஒரு குன்றென வீழ்ந்தனன்” (248) சரம் - அம்பு, பகு வாய் = பிளந்த வாய். விட்டு அழைத்தல் = இலக்குமணா - சீதா, இலக்குமணா - சீதா என விட்டு விட்டு - மாறி மாறி அழைத்தல். இவ்வாறு பெயர்களைக் கூறி அழைத்ததாகக் கதை சொல்லப்படினும், கம்பர் பாடலில் இவ்வாறு எழுதப்படவில்லை. ஆனால், பின்னால் ஒரு குறிப்பு உள்ளது. பெயர் கூறி அழைத்ததாக வால்மீகி கூறியுளள்ார்.

பின்னர் இராமன், மாரீசனின் செயல் இது என அறிந்து, இலக்குவன் சொன்னது சரிதான் என இலக்குவனை மெச்சிக்கொண்டான்.

என் குரல்

அம்பெய்ததும், கயவன் மாரீசன் என் குரலால் கூவி அழைத்தலால், அதைக்கேட்ட சீதை, நான் வருந்தி அழைத்ததாக எண்ணி வருந்துவாள் என்று இராமன் ஒருவித வருத்தம் உற்றான்:

"புழைத்த வாளி உரம்புகப் புல்லியோன்

இழைத்த மாயையின் என்குரலால் எடுத்து அழைத்த துண்டு அதுகேட்டு அயர்வெய்துவாள் மழைக்கண் ஏழை என்றுள்ளம் வருந்தினான்’ (251)

புழைத்த = துளைத்த. Ա) Ո 65) Ա_1 கற்றவனாதலின் இராமனது குரல்போல் கூவி அழைத்தான். இலக்குமணா - சீதா என்று பெயர் கூறி அழைத்ததாகக் கூறாவிடினும், இராமனது குரலில் அழைத்ததால், அவ்வாறு பெயர் சொல்வி அழைத்திருப்பான் என்பது உய்த்துணரப்படும்.