பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/229

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் 0 221

அறிவு - நற்றிணையில்:

'உறுதி தூக்கத் தூங்கி அறிவே

சிறிதுகனி விரையல் என்னும் ஆவிடை’ (284) கடல் (ஒதம்), கானல் (பொழில்), புள் (அன்னம்) : சிலப்பதிகாரம் - கானல் வரியில்:

"நேர்ந்த காதலர் நேமி நெடுங்தேர்

ஊர்ந்த வழிசிதைய ஊர்கின்ற ஒதமே பூந்தண் பொழிலே புணர்ந்தாடும் அன்னமே ஈர்ந்தண் துறையே இதுதகாது என்னீரே” மரம் - (மாந்தளிர்) - கலித்தொகையில்:

"மன்றப் பணைமேல் மலைமாந்தளிரே நீ

தொன்றிவ் வுலகத்துக் கேட்டும் அறிதியோ"

(142:47, 48) பொழுது (மாலை) - கலித்தொகையில்:

'மாலை நீ,

தையெனக் கோவலர் தனிக்குழல் இசைகேட்டுப் பையென்ற நெஞ்சத்தேம் பக்கம் பாராட்டுவாய்”

(108) நெஞ்சு - திருக்குறளில் பல அவற்றில் ஒன்று:

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவைஎன்னைத்

தின்னும் அவர்க்கான லுற்று' (1244) விலங்கு (மான்), மயில், குயில், பிடி - நைடதத்தில்: 'வாவும் இள மான்காள் மயில்காள் மடப்பிடிகாள்

கூவும் கரிய குயில்காள் மென் புள்ளினங்காள் ஆவி எனமேவி அகலேம் என அகன்ற காவலன்தான் போனவழி எனக்குக் காட்டீரோ”

(பிரிவுறு படலம் - 18)