பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/246

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


244 I ஆரணிய காண்ட ஆப்வு

“நின்றேனும் நின்றேன் நெடுமரம் போல் நின்றேனே" என மும்முறை நின்றேன்’ எனச் சொல்லியிருப்பது, இராமனது மனப்புண்ணை மிகுத்துக்காட்டி அவலச் சுவை - இரக்க உணர்வு அளிக்கிறது. -

இழந்தவை பெற்றனன்

சடாயு உணர்வு வந்து விழித்து இராம இலக்குவரை நோக்கியதும், இராவணனால் இழந்த இரு சிறகுகளையும் இனிய உயிரையும் ஏழுலகையும் பெற்றதை ஒத்த மன மனநிறைவு எய்தினான்:

"இற்ற இருசிறகும் இன்னுயிரும் ஏழுலகும்

பெற்றானே ஒத்தான் பெயர்த்தேன் பழி என்றான்” பிறகு, இருவரையும் அருகழைத்து மாறிமாறித் தன் அலகால் உச்சி மோந்தான்:

'மூக்கினால் உச்சி முறையே மோக்கின்றான்" (189) பெற்றோர் பிள்ளைகளின் உச்சியை மோத்தல் செய்வர். சடாயு தந்தை முறையினன் ஆதலால், பிள்ளை களாகிய இராம இலக்குவரை உச்சி மோந்தான். இதனால் இவனது அன்புப் பெருக்கு தெரிய வரும்.

சடாயு சிறப்புத் தந்தை. சொந்தத் தந்தையாகிய தயரதனும் உச்சி மோத்தல் உண்டு. இராமனைப் பிரிந்ததும், என்மகனை உச்சி மோக்கும் பேற்றை இழந்து விட்டேனே என்று தயரதன் வருந்தியதாகக் குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழியில் கூறப்பட்டுள்ளது:

மோவது உச்சி ....

என்மகனை இழந்திட்ட இழிதகையேன்

இருக்கின்றேனே' (9:6) என்பது பாடல் பகுதி. இதனால், சடாயு, தந்தை என்னும் உறவு முறைக்கு மிகவும் தக்கவன் என்பது புலப்படும்.