பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 0 ஆரணிய காண்ட ஆய்வு

முன்னோர்கள், இப்போது உள்ள நல்லவன் முன்பிறவியில் தீமை செய்திருக்க வேண்டும் - இப்போது தீமை செய்பவன் முன் பிறவியில் நல்லது செய்திருக்க வேண்டும் - என ஒர் ஊகமாக உய்த்துணர்வாக முடிவு எடுத்தனர்.

'அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்” (169) என்னும் குறளும் ஈண்டு எண்ணத்தக்கது. நினைக்கப்படும்' என்பது இந்த உய்த்துணர்வாகத்தான் இருக்கவேண்டும்.

ஊழ் என ஒன்றில்லை; தற்செயலாய் - இயற்கையாய், எதிர்பாராமல் நிகழ்வுறும் இன்ப துன்பங்களை ஊழால் நிகழ்வதாகக் கூறமுடியாது. தற்செயலாகிய விதியை மதியால் வெல்லலாம் - என்பர் ஒரு சாரார். இதற்கு, “ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்’ (620) என்னும் குறளை அரணாக்குபவர். முடிவு என்ன?

தற்செயலாய் நடப்பதான விதியை மதியால் வெல்ல முடியாது. நிகழ்ந்து விட்ட பின்பு வேண்டுமானால், மதியின் கூர்மையால் நிலைமையைச் சரி செய்ய முயலலாம். எனவேதான், 'மதி வலியால் விதி வெல்ல வல்லமோ”

எனச்சடாயு வாயிலாகக் கம்பர் கூறியுள்ளார்.

என் குழந்தை ஒன்று இறந்து விட்டபோது யான் மிகவும் வருந்தினேன். அப்போது பெரியவர் ஒருவர் என்னை நோக்கி, 'படித்தபிள்ளையே இப்படி வருந்தலாமா அதற்கு விதி முடிந்து விட்டது - நாம் எவ்வளவு முயலிலும் அதைக் காப்பாற்ற முடியாது - இதற்குப் போய் வருந்திக் கொண்டிருக்கலாமா? எழுந்து போய் வேலையைக் கவனி - என்று ஆறுதலும் ஊக்குதலும் ஒருசேரச் செய்தார்.