பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/250

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


248 ஆரணிய காண்ட ஆய்வு

எனவே, சடாயுவை இ ரா வ ண ன் வாளால் வெட்டினான் என்பதை அறிந்ததும் உலகங்கள் யாவற்றையும் அழித்து விடுவதாகச் சொன்னதும் போர் ஊக்கமே. இராமன் நிலைக்கு உலக அழிப்பு கூறப் பட்டுள்ளது.

"தனி ஒருவனுக்கு உணவு இலையெனில் சகத்தினை அழித்திடுவோம்”

என்று பாரதி சொன்னதும் இதே நிலைதான்.

உயிர்கட்கு பதினான்கு விதமான ஊக்கங்கள் இயல்பாகவே உள்ளன என உளநூல் கூறுகிறது. இவற்றை "இயல்பூக்கங்கள்’ என்பர். egyi Gavšĝå Instincts

என்பர். இந்தப் பதினான்கனுள் போர் ஊக்கம் (Instinct of Combat) என்பதும் ஒன்றாகும்.

கடவுளர்கட்கே போரூக்கம் இருந்ததெனில், மக்கள் பிறவியிலுள்ள இராமனுக்கு, உலகத்தையே அழிக்கப் போவதாகச் சொன்ன போரூக்கம் இருந்ததில் வியப்பில்லை.

இராமனது சினங்கொண்ட தோற்றத்திற்கு எல்லாம் அஞ்சினவாம் - எல்லாரும் அஞ்சினராம் - தம்பி இலக்குவனும் அஞ்சினான் என்றால் மற்றவர் நிலை என்ன?

'அஞ்சினன் இளைய கோவும் அயல் உள்ளோர்க்கு

அவதி உண்டோ?” (207)

உம் பிழை

இவ்வாறு சினங்கொண்டு துடித்த இராமனுக்குச் சடாயு பல ஆறுதல் கூறினான்; இடித்துரைத்தலும் செய்தான்:

சீதையைத் தனியே விட்டுவிட்டு மானின் பின்னே சென்று பழி தேடிக் கொண்டீர். ஆராய்ந்து நோக்குங்கால், இது உம் பிழையேயன்றி உலகத்தின் பிழை இல்லை: