பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 0 287

நீண்டிருந்த துண்டோ? இருந்திராது. ஆயின், இன்று மட்டும் இரவு நீள்வதற்குக் காரணம் என்ன என்று வினவுகிறான்:

வென்றி வேற்கை இனவலை மேலெலாம்

ஒன்று போல உவப்பில நாள்கள்தாம் கின்று காண்டி யன்றே நெடுங் கங்குல்தான் இன்று நீள்வதற்கு ஏது என் என்னுமால்’ (19) மேல் எலாம் = முன்பு எல்லாம். இன்று நீள்வதால் நெடுங்கங்குல்' என்றான் - கங்குல் = இரவு.

நீண்ட மதி

இராமன் நிலவைப் பார்த்து வினவுகிறான் : நிலவே! முன்பு சீதை இருந்ததால், அவள் முகத்திற்கு நாணி நாள்தோறும் தேய்ந்து கொண்டிருந்தாய். இப்போது அவள் இல்லாததனால், தேய்தல் இன்றி முழுத் தோற்றத்துடன் நீண்ட நேரம் இருக்கின்றாய் போலும் - என்றான்.

'நீண்ட மாலை மதியினை நித்தமும்

மீண்டும் மீண்டும் மெலிந்தனை வெள்.குவாய் பூண்ட பூணவள் வாள்முகம் போதலால் ஈண்டு சால விளங்கினை என்னுமால்' (20)

நாடு கடத்தல்

ஞாயிறானவன், தன் குலத்து இராமன் மனைவியை இராவணன் கடத்தியதால் ஏற்பட்ட பழிக்கு வெட்கி, நாடு கடந்தானோ? என்று ஐயுறுகிறான் இராமன்.

'மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்

காதலை வாழி மதி’ (1118)

என்னும் குறள் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. வெள் குவாய் = வெட்கப் படுவாய். பூணவள் - சீதை