பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/279

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் ) 277

மண் நகம், மயிர் முளைக்கின்றன; இறுதியில் மண்ணாகவோ சாம்பலாகவோ ஆய் விடுகிறது . இது மண்.

இது தொடர்பான சமசுகிருதப் பாடல் ஒன்றின் கருத்து வருமாறு:- காதலியை அடையாத காதலன் கூறுகிறான்:

நான் இறந்து விடின், என் உடம்பில் உள்ள விண்பகுதி என் காதலி உலவும் இடத்திலுள்ள விண்ணோடு கலப்ப

தாகுக.

என் உடம்பில் உள்ள காற்றுப் பகுதி, என் காதலி மேல் படும் காற்றோடு கலப்பதாகுக.

என் உடம்பில் உள்ள தீ, என் காதலி பார்க்கும் முகக் கண்ணாடியில் சேர்வதாகுக.

என் உடம்பில் உள்ள நீர், என் காதலி புனலாடும் பொய்கையில் கலப்பதாகுக.

என் உடம்பில் உள்ள மண் பகுதி, என் காதலி நடமாடும் தரைப் பகுதியோடு சேர்வதாகுக.

இவ்வாறு கூறினானாம். எனவே, உடம்பு ஐம்பூதங் களின் திரிபாக்கம் என்பது பெறப்படும்.

ஆனால் கம்பர், கவந்தனின் உடம்பு ஐம்பூதங்களால் ஆனது அன்று; பொய், களவு, காமம், குடி, கொலை என்னும் ஐம்பெருங் குற்றங்களால் (பஞ்சமாபாதகங் களால்) ஆனது என்கிறார்:

'ஒதநீர் மண்ணிவை முதல ஓதிய

பூதம்ஒர் ஐந்தினில் பொருந்திற் றன்றியே வேதநூல் வரன்முறை விதிக்கும் ஐம்பெரும் பாதகம் திரண்டு உயிர்படைத்த பண்பினான்’ (16)