பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 0 27

அறிந்துள்ளாய் - கன்றுகளாகிய உயிர்கள் உன்னை அறிய முடியவில்லை. இது என்ன மாயமோ - என்று போற்றினான்.

"தாய் தன்னை அறியாத கன்றில்லை தன் கன்றை

யாயும் அறியும், உலகின் தாயாகின், ஐய, யேறிதி எப்பொருளும் அவை உன்னை நிலை அறியா மாயை இது என்கொலோ வாராதே வரவல்லாய்” (54)

ஒரு கன்றைப் பல ஆன் குழாத்துள் விட்டாலும் அது, தன் தாயைத் தேடி அடைந்து விடுமாம்:

“பல் ஆவுள் உய்த்து விடினும் குழக்கன்று

வல்லதாம் தாய்நாடிக் கோடலை (101) என்னும் நாலடியார்ப் பாடல் பகுதி ஒப்பு நோக்கத்தக்கது.

'வாராது வந்த மாமணி’ என்பது போல் சொல்வ தெல்லாம், கம்பரின் வாராதே வர வல்லாய் என்னும் தொடரை அடியொற்றியே யாம். கம்பரும், நம்மாழ்வார் அருளிய திருவாய் மொழியில் உள்ள

வாரா தாய்போல் வருவானே” (6:10:9) என்னும் தொடரை அடியொற்றிக் கூறியிருக்கலாம்.

இவ்வாறு பலவாறாகத் திருமாலின் புகழ்களை எல்லாம், அவரது தெய்வப் பிறவியாகிய இராமன் மேல் ஏற்றிப் புகழ்ந்து போற்றினான்.

விராதன் வரலாறு

தன் வரலாறு கேட்ட இராமனுக்கு விராதன் கூற லானான். யான் குபேரன் அவையிலே தும்புரு என்னும் பெயருடன் குபேரனின் உதவியாளனாக இருந்தேன். இடையிலே அரம்பையோடு தொடர்பு கொண்டதால், குபேரன் என்னை அரக்கனாகுக என வைவு (சாபம்) இட்டான். இராமன் திருவடி பட்டதும் மீண்டும் பழைய