பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர் சண்முகனார் ロ 31

அழகுக்கு அழகு செய்வதாகவும் அணிக்கு அணி பூட்டுவதாகவும் புலவர்கள் பலர் கூறியுள்ளனர்.

கம்பரோ, சீதைக்குத் தோழியர் அணிகலன்கள் அணிந்ததை,

'அமிழ்தினைச் சுவை செய்தென்ன அழகினுக்கு

அழகு செய்தார்’ (1:22:3)

என்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், வள்ளுவரோ, சொந்த நகை உள்ளபோது இரவல் நகை ஏன்? - என்று வினவுகிறார்:

"பிணையேர் மடகோக்கும் நானும் உடையாட்கு

அணினவனோ ஏதில தந்து' (1089)

சொந்த நகை என்பது இயற்கை அழகு. மேலே அணிந்து கொள்வது அயலான - இரவலான நகையாகும். இந்திரன் சொந்த நகையோடு இரவல் நகையும் அணிந் துள்ளான் என்பது கருத்து.

பிரமனது அழைப்பு:

வந்த இந்திரன் சரபங்க முனிவரை அணுகி, அவரை நான்முகன் அழைத்து வரச் சொன்னதாகக் கூறினான். முனிவர் அதற்கு உடன்படாமல், நான்முகனது சத்திய லோகத்தை அடைந்து பெறும் இன்பத்தை யான் விரும்ப வில்லை எனக் காரணத்துடன் கூறலானார்:

மறுகா நெறி:

குறிப்பிட்ட சிறிது காலம் மட்டுமன்றி நிலை திரியாமல் என்றும் நிலைத்திருப்பதும், குறையாததும், விரியாததும், தன்மை வேறுபடாததும், பூதம் எல்லாம் அழியினும் தான் அழியாததுமான இருப்பிடத்தை அடையவே யான் விரும்புகிறேன்: