பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


70 0 ஆரணிய காண்ட ஆய்வு

என்றார். இங்கே, பஞ்சவடி ஆற்றைப் பொன்னி எனல் ஆய ஆறு என்றுள்ளார்.

காவிரி நீர் வளத்தால் நாட்டில் பொன் கொழிக்கச் செய்கிறது - அதாவது செல்வம் பெருகச் செய்கிறது:

"புனல் பரந்து பொன் கொழிக்கும்

விளைவு அறா வியன்கழனி' (7, 8) என்பது பட்டினப் பாலை, வண்டலுடன் குழம்பாகச் செல்லும் நீரில் பொன் துகள் போன்ற பொடி மின்னும். இதை நேரில் காணலாம். இந்தக் காட்சியைப் பாரதிதாசனார்,

'பொன் விளைந்தாற் போலும் கறுப்பொடி

விரிந்த. காவிரி' என்று குறிப்பிட்டுள்ளார். எண்ணற்ற நூல்களில் காவிரி பொன்னி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெய்வப் பொன்னி

காவிரியைத் தெய்வப் பொன்னி என்று போற்றி யுள்ளார். கம்பர். இந்தக் கம்பரின் கூற்றுக்கு அரண் செய்யும் வகையில் அகச் சான்றுகள் சில காண்பாம்:

"தண்ணறுங் காவிரித் தாதுமலி பெருந்துறைப்

புண்ணிய நன்னீர்” இது சிலப்பதிகாரம் (5:165, 16)

"தெய்வக் காவிரித் தீது சீர் சிறப்பு' சிலம்பு - 10 கட்டுரை - 8. இனிச் சம்பந்தரின் பாடல் பகுதிகள் வருக;- - ..

'பாவம் தீர் புனல் பாற்றுறை (1-56-4) 'ஆடுவோர் பாவம் தீர்த்து. திகழு மாகாவிரி (7.7.46) "தீர்த்த நீர் வந்திழிதரு பொன்னியின் பனிமலர்

வார்த்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி'

(2-2-9-6)