ஆரம்ப அரசியல் நூல் தனுக்கு இன்றியமையாதவையான சில மூலாதார உரிமை களைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றது. தனி மனிதர்களும் ~ : சங்கங்களும் அரசுக்கு எவ்விதம் கட்டுப்அரசியல் பட்டவர்க ளென்பதையும், அவர்களுக்கு திட்டத்தின் مبد. ونې په سببه يې مه .س مر س ې உள்ளுறை அரசியல் அதிகாரத்தில் எவ்வளவு தொடர்பு • , உண்டு என்பதையும் அத்திட்டம் நன்கு விளக்கும்; சட்டசபை, கிர்வாகம், நீதி இலாகா என்பவற் றின் அமைப்பையும் அதிகார வரம்புகளையும் நிர்ணயம் செய்யும். . . . . அரசின் அதிகாரம் வரம்பு கடந்து சென்ருல் அதைத் தடைப்படுத்தி நிறுத்துவதுதான் அரசியல் திட்டத்தின் முக்கிய உபயோகம். ஒவ்வோர் அரசுக்கும் அரசியல் திட் டம் ஒன்று இருந்தே தீரவேண்டும். அரசாங்கத்திற்கும், சமூகத்தின் பல பகுதிகளுக்கும் ஏற்படும் தொடர்பை நிர்ண யிக்கும் மூலாதாரக் கொள்கைகளும் விதிகளும் அத்திட்டத் தில்ை ஏற்படும்; அவை இல்லாவிடின் அரசியல் நிலைமை சீர்குலைந்து போகும். " . . . . . . . . . . அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் வேறு பல தேசங்களி - லும் அரசியல் திட்டம் சட்ட பூர்வமாக அமைந்துள்ளது. ... பிரிட்டனிலுள்ள அரசியல் திட்டம் ஒன்றுதான் அவ்வாறு அமையவில்லை. ஆயினும் அங்கேகூட அரசியல் விதிகளும் o முறைகளும் சில நிர்ணயமான சட்டங்கள் மூலமாகவும் நீதிமன்றத்துத் தீர்ப்புகள் மூலமாகவும் ஓரளவு அறியக்கிடக் கின்றன. பிரிட்டனில் நடைமுறையில் சில சம்பிரதாயமான வரையறைகளும் முறைகளும் உண்டு; அந்தச் சம்பிரதாயங் களுக்கும் சட்டபூர்வமாக ஏற்பட்ட விதிகளைப் போன்ற செல்வாக்கும் சிறப்பும் உண்டு. சட்ட பூர்வமான அரசியல் திட்டங்களில் திருத்தங்கள் செய்வது கஷ்டம். திருத்தங்களே நிறைவேற்றுவதற்குத் திட்டத்தில் குறித்துள்ளபடி ஒரு தனி ஸ்தாபனம் ஏற்பட வேண்டும்; அல்லது ஒரு தனி முறையை மேற்கொள்ள வேண்டும். பிரிட்டனிலோ இத்தகைய அவசியம் இல்லை. அங்கே அரசியல் திட்ட மாறுதல்கள் சாதாரணச் சட்டங்கள் 58
பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/70
Appearance