பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலாய் மொழியில் தமிழ் வழக்குச் சொற்கள் Iif

ஒரு சமுதாயத்தின் உயிரணுவாய் விளங்குவது குடும்பம். அதன் இதயத் துடிப்பாய் இலங்குவன உறவு முறைப்பெயர்கள். அவற்றுள் இன்றியமையா எட்டுச் சொற்கள்-துரய தனித்தமிழ் சொற்கள்-மலாய்மொழிக் குப் பலவகை வடிவில் வாழ்வு வழங்கியுள்ளன. அவை அப்பா, அம்மா, ஐயா, அண்ணன், தம்பி, ஆச்சி, மாமன், மாமி ஆகியனவாகும். இவற்றுள் ஆச்சி என்பது அக்காளைக் குறிக்கச் செட்டி நாட்டாரால் வழங்கப்பெறும் வட்டாரச்சொல் இச்சொல் மலாய்மொழியில் இடம்பெற் றுள்ள ஏற்றம் அச் சொல்லுக்குரிய நாட்டுக்கோட்னட நகரத்தார்க்கு, மலாய் மக்கள் வாழ்வில் உள்ள பெரிய செல்வாக்கைப் புலப்படுத்தும்.

இனி, குறிக்கத் தக்கது. மலாய் மொழியில் இடம் பெற்றுள்ள ஆறு (வழி என்னும் பொருளில்) தாலம், திரை (அலை என்னும் பொருளில்) நிரை, பரிசை மண்டுமண் (நீராடு என்னும் பொருளில்) மனுட்டுப் பெண் ஆகியன பெரிதும் இலக்கிய வழக்குடைய செந்தமிழ்ச் சொற்களே ஆகும் என்பதே

இக் கட்டுரையை முடிக்குமுன், இறுதியாக ஆளுல் உறுதியாக குறிக்கத்தக்க கருத்து ஒன்று உண்டு. அது ஏறத்தாழ இருபது மொழிகளின்' செல்வாக்கைப் பெற் றுள்ள மலாய்மொழியில் தமிழின் செல்வாக்கே தொன்மை சான்றது, வன்மைமிக்கது என்பதே ஆகும்."

11. இம்மொழிகளின் பட்டியலை அறிய பார்க்க :Sir Richard Winstedt : An unabridged Mai ay-English Dictionary [1960] р. 6.

12. மேற்குறிப்பிட்ட வின்ஸ்டெட் அகராதியுள் உள்ள ஏழத்தாழ் 13500 சொற்களுள் தமிழ் வழக்குச் சொற்கள் ஏறத்தாழ 4 சதவீதம்; இவற்றுள் தூய தனித் தமிழ்ச்சொற் கள் ஏறத்தாழ 1 சதவீதம். எனிலும் பிறமொழிச் சொற் களின் தொன்மையோடு தன்மையோடும் ஒப்பிடும்போது, தமிழ்ச் சொற்களின் தனிச்சிறப்புப் புலனுகும்.