பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் உலகுக்கு வழங்கியவை ££g

'முத்தமிழ் வழியே கடவுளை அடைதலும் கூடும் எனக்கண்ட நற்றமிழ் ஞானசம்பந்தர், ஆடல் நெறி. பாடல் நெறி' எனப் புதிதாகக் கூறியுள்ளார். பாடல் நெறி இயல் இசை என்ற இரண்டையும் குறிப்பதால், முத்தமிழும் இங்கே குறிக்கப்பட்டமை காண்க."

ఫ్రీశ్ర gఫ్రి

இவ்வாறு நம் தலைமுறையின் தலை சிறந்த புலவ ரேற்ால் விளக்கப்பெறும் முத்தமிழ், தமிழர் உலகுக்குக் கொடுத்த பெருஞ்செல்வமே ஆகும். ஆனால், ஆரவாரம் மிகுந்த உலகம், இன்னும் அதன் பெருமையைத் தக்க வாறு உணர்ந்ததாகத் தெரியவில்லையே!

அம்மட்டோ? அம் முத்தமிழுள்ளும் முதன்மை படைத்த இயல் தமிழின் அகப்புறப் பாகுபாடுகளும் சொல் திணைப் பாகுபாடுகளும் தமிழர் உலகுக்கு வழங்கிய சிறந்த இலக்கியப் பாகுபாடுகள் அல்லவா?

“அகம் புறமாய்ப் பாகுபட்டு விளங்கும் பழந்தமிழ் இலக்கியத்துள் காணப்படும் ஐந்திணை அமைதி உலக இலக்கியம் எதுவும் காணுத ஒரு பெரும்புதுமை-பெருமை’ என்று அண்மையில் (3-11-1960) சென்னைப் பல்கலைக் கழகத்தில் "மொழியாராய்ச்சி வட்டத்தின் (Linguistic Circle) சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய டாக்டர் சுனித்குமார சட்டர்ஜி (நன்னெறி முருகளுர்) கூறிய அமுத மொழி, உலகப் பேரறிஞர் திருச்செவிகளில் சென்று சேரும் நாள் எந்நாளோ!

தமிழ் இலக்கியங்களுக்குள்ளேயே தலைமை சான்ற திருக்குறள் உலகத்திற்குத் தமிழர் வழங்கிய பெருந்திரு வன்ருே?

4. பண்டிதமணி மணிமலர் (1941)-பக்கம், 71-71,