பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ക്

கட்டுரைக் கலை

1

இலக்கிய கலையின் உயிர் கவிதைக் கலை என்ருல், இலக்கியக் கலையின் உள்ளம் கட்டுரைக் கலை எனலாம். கட்டுரைக் கலையாகிய உள்ளம் உயிரொளி பெறும்போது கவிதைக் கலை தோன்றும். கட்டுரைக்கலை"யாகிய மயில் தனது கற்பனைச் சிறகுகளை விரித்தாடும் காட்சியே கவிதைக் கலை என்றும் அழகுணர்ச்சி துளும்பக் கூறலாம். நீலவானத்தை அணி செய்யும் ஞாயிறும் திங்களும் போல இலக்கிய வானத்தை எழில் செய்யும் இருபெருஞ் கடர்கள் கட்டுரையும் கவிதையும் என்றும் கருதிக் களிக்கலாம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கட்டுரைக்கலை தமிழ் மொழியில் தழைத்து வளர்ந்த திறத்தினை ஆராய்வதே இக்கட்டுரையின் தலையாய நோக்கம். இவ்வாராய்ச்சி யில் ஈடுபடுதற்குரிய தோற்றுவாயாகக் கட்டுரை என்ற சொல்லின் பழமையையும் பொருண்மையையும் முன் னர்க் காண்போம் :

  • சென்னப்பல்கலைக்கழகக் கிழக்குநாட்டுக்கஆைராய்ச்சி இதழில் (vol. No: xw11-1960-61) வெளியிடப்பெற்றது.