பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9& ஆராய்ச்சிக் கட்டுரைகள்

است.

f

யெழுந்து மீண்டும் நீரில் மூழ்கி மறையும் அழகினைக் கண்டு வியப்பார்; கடலெங்கும் காரிருள் விரியுங்கால் விண் னிலே மிளிரும் எண்ணிறந்த மீன்களின் விளக்கங் கண்டு களிப்பார்: கருங்கடலில் ஊர்ந்து செல்லும் நிறைமதியின் ஒளிகண்டு நெஞ்சம் தழைப்பார். இங்கனம் இயற்கை இன்பம் நுகர்ந்து மனங்குளிர்ந்த கால்டுவெலின் உடலும் நலனுறுவதாயிற்று.”

பேராசிரியர் அவர்கள் கட்டுரைக் கலையைப் பற்றி ஆராயும்போது, போற்றவேண்டுவதாயுள்ள ஒரு பெருஞ் சிறப்பு. அவர்கள் தம் வாழ்நாள் முழுதும் எழுதிய கட் டுரைகளில் ஒன்றுகூட இலக்கிய நெறிக்கும் வரலாற்றுச் சிறப்புக்கும் மாறுபடாமையே ஆகும்.

பேராசிரியர் அவர்கள் கட்டுரைகளில் பெரும் பாலானவை, இலக்கியச் சுவை தரும் கட்டுரைகளே ஆயினும், சென்னைக் கடற்கரை"," "சிவனடியார் முழக் கம்'," தெய்வம் படும் பாடு', 'சரம கவிராயர்'," முத லான நகைச்சுவைக் கட்டுரைகளையும், திருவள்ளுவர்எல்லீசர் உரை", "புதுவை மாநகரம்' போன்ற இலக்கிய வரலாற்று ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், பிறவகைக் கட்டுரைகளையும் பேராசிரியர் அவர்கள் நூற்ருெகுதியுள் காணலாம். ஆனல், பேராசிரியர் அவர்கள் எழுதிய கட்டுரை நூல்களுள் தனிச்சிறப்பு வாய்ந்ததொரு நூல்

59. அலேயும் கலையும் (1958), கட்டுரை எண்-4. 60. தமிழின்பம் (1959), கட்டுரை எண் 19 61. 笼至 9 * கட்டுரை எண் 30

62. * * 苓苯 கட்டுரை எண் 20 63. அலேயும் கலையும் (1958), கட்டுரை எண் 13 64. z o وو கட்டுரை எண் 6